கம்ப இராமாயணம் இரணிய வதைப் படல பாடல் ஒன்று:-
மிகப் பெரிய உருவம் கொள்கிறது. பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல....கம்பன் வருணிக்கிறான்....மிக பிரமாண்டமான வடிவம்....கற்பனைக்கு எட்டாத வடிவம்...
பாடல்
'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்
பிளந்தது தூணும் = தூண் பிளந்தது
ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்
பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது
திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது
பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
அப் புறத்துச் செய்கை = இந்த உலகத்தை தாண்டி அந்த பக்கம் அது வளர்ந்ததையும், அங்கு என்ன செய்தது என்பதையும்
யார் அறிந்துஅறையகிற்பார் ? = யார் அறிந்து சொல்ல முடியும் ? கண்ணுக்கு எட்டும் வரை நாம் அறிந்து சொல்ல முடியும் ? அந்த நரசிங்கமோ மிக பிரமாண்டமாக வளர்ந்து இந்த உலகையும் தாண்டி அப்புறம் சென்றது. அங்கிருந்து யாரவது வந்து சொன்னால் தான் உண்டு அது எவ்வளவு தூரம் சென்றது என்று.
கிளர்ந்தது = கிளர்ந்தது
ககன முட்டை கிழிந்தது = உலகம் என்ற முட்டை கிழிந்தது
கீழும் மேலும்.= மேலயும் கீழேயும். ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நின்றது.
Source:-
http://interestingtamilpoems.blogspot.sg/2013/05/blog-post_709.html
This comment has been removed by the author.
ReplyDelete