Search This Blog

Feb 25, 2019

கர்மா

அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.

இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.

அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.

அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.

ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.

மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

 நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.

சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.

பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.

அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.

அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. 

தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. 

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.

ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..

 ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

 அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.

அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை

-படித்ததில் பிடித்தது.



Sri Krishnan thiruvadigale gathi


Feb 23, 2019

Ghati Subramanya Kshethra - A rare temple of Lord Subramanya and Nrusimha





Lord Sri Subramanya a popular Deity in Hindu religion is worshiped across the country especially in South India. Regarded as the son of Lord Shiva, Subramanya was commander-in-chief of army of Gods who killed the demon Tharakasura. He is also popularly called as Shanmukha, Karthikeya, Saravanabhava, and Skanda etc. Guha is another name of Lord Subramanya, the one who dwells in caves and invariably we find mountains and caves as the abode of Lord Subramanya. There are several temples dedicated to Lord Subramanya spread across the country and some of them are pilgrim centers famous as Subramanya Kshethras. One such temple which is of rare significance is located at Ghati in Karnataka state about 60 km from Bangalore.



According to Sthala Purana (Temple legend) Ghati is the place where Lord Subramanya performed penance in the guise of a serpent [(there is a tradition to worship to Lord Subramanya in Sarpa roopa (serpentine form)] inside the caves in the mountain ranges of this area before going to kill the demon Tharakasura. Ghati is also the place where Lord Subramanya invoked protection from Lord Lakshmi Narasimha for the serpentine clan from Garuda’s scare. Traditionally Garuda the divine mount of Lord Vishnu is known to be an enemy of Serpentine tribe.



Combining the above said episodes the temple at Ghati is uniquely dedicated to both deities Lord Subramanya and Lord Lakshmi Narasimha a rare combination. Rarity of this temple is that both Deities are carved on a single self manifested (swayambhu) idol with Lord Subramanya in a seven hooded serpentine form (cobra) facing east and Lord Lakshmi Narasimha facing west. One can view Lord Lakshmi Narasimha through strategically placed mirror inside the sanctum sanctorum.



Ghata is a Sanskrit word meaning a pot. A serpent’s hood resembles that of a pot and Ghati is the place where Lord Subramanya lived in the form of Ghata Sarpa. In Hindi Ghat means mountain range and this temple of Lord Subramanya is located in the mountain ranges.  Ghati is believed to be the place where Lord Subramanya killed a demon called Ghatikasura. According to temple records the temple at Ghati Subramanya Kshethra has a history of more than 600 years and it was first built by Ghorpade erstwhile rulers of Sandur dynasty. This rare and self manifested idol was unearthed by the King with the help of local citizens as per the directions (dream) given by Lord Subramanya himself.

Ghati has become one of the major pilgrim centers of Karnataka state and due to the serpentine form of Lord Subramanya the place is also revered as a Naga Kshethra. Thousands of devotees approach this temple for worshiping Lord Subramanya as a remedy for various negative results from Kuja (Mars) especially Kuja (Angaraka) Dosha, marital related problems and prosperity, as a remedy for malefic effects from Rahu, Sarpa/Naga Dosha, for attaining progeny; as a remedy for health problems especially chronic skin diseases like leprosy, leukoderma, relief from enemies (both internal & external), relief from debts apart from overall prosperity and general wellbeing.


Lord Narasimha - Deeparadhanai

Ghati Subramanya Kshethra can be reached by road via Doddaballapura about 45 km from Bangalore and from there Ghati is about 15 km distance. Nearest railway station is Makalidurga about 5 km from Ghati on the Bangalore-Guntakal line. Nearest airport Bangalore International Airport at Devanahalli is about 30 km from Ghati.  The temple is open on all the week days from morning 06.30 am to night 09.00 pm.
Lord Subrahmanya - Turmeric Abhishegam

Temple car festival is held every year on the 6th lunar day (Sukla Shashti) during Pushya maasam apart from, special celebrations held on other important occasions as per the calendar for worship of Lord Subramanya and Lord Lakshmi Narasimha.



Shadananam Kunkuma Raktha Varnam
Mahamathim! Divya Mayura Vaahanam
Rudrasya Sunum! Surasasya Natham
Guham Sadhaham Saranam Prapadhye


Sri Krishnaarpanamasthu



Feb 21, 2019

பாட்டிகள் மஹாத்மியம் - ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்

பாட்டிகள் மஹாத்மியம் 4 [பதரி பாட்டி-கண் தெரியாத பாட்டி-பட்டுப் பாட்டி]
பதரி பாட்டி
ஒரு நாள் காஞ்சீபுரத்தில் ஏதோ கோவிலில் மத்யான்னம் வரைக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, வந்திருந்த எல்லோருக்கும் பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார்.
ஒரு வயஸான பாட்டி நின்று கொண்டிருந்தாள். பெரியவா தர்ஶனம் ஒன்றுதான் அவளுக்கு வாழ்வாதாரம்! பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
“ஒனக்கென்ன வேணும்? கேளு…..”
தன்னுடைய பரம பக்தை என்று தெரியும். சிரித்துக் கொண்டே அந்த பாட்டியை கிண்டினார்.
“எனக்கு… இனிமே என்ன வேணும்? ஸதா ஸர்வ காலமும் பெரியவாளை ஆராதிச்சுண்டே இருந்தா, அது ஒண்ணே போறும்..”
“அதான் இருக்கே!…. கொறையே இல்லாம பண்றியே! இப்போ, இந்த க்ஷணம் ஒனக்கு ஏதாவது ஆசை இருக்கா? சொல்லு…..”
சுற்றி இருந்தவர்கள், ‘ஏன் இப்படி குடைகிறார்? ‘என்று புரியாமல் முழித்தனர்.
பெரியவா அப்படி சொன்னதும் பாட்டி கொஞ்சம் தயங்கினாள்.
விடுவாரா என்ன? இன்று அந்த பாட்டி வாயைக் கிண்டி கிளறி ஏதோ ஹிமாலய விஷயத்தை, தூஸு மாதிரி உலகுக்கு காட்டும் திருவிளையாடல் அரங்கேற வேண்டாமா?
“சொல்லு.! சொல்லு! பரவாயில்ல! என்னால முடிஞ்ச அளவு ஒத்தாஸை பண்றேன்…..”
[ஓஹோ! முடிஞ்ச அளவாமே!… இவருக்கு ஆரம்பம்னோ, முடிவுன்னோ, அளவுன்னோ ஏதாவது இருக்கா என்ன?]
“எனக்கு ஒரே ஒரு ஆசைதான் பெரியவா…! இந்த உஸுர் போறதுக்குள்ள…. ஒரே ஒரு தடவை அந்த பத்ரி நாராயணனை பாக்கணும்..!”
மெதுவான குரலில் தயங்கித் தயங்கி சொன்னாள்.
இதற்காகவே காத்திருந்தவர் போல் பலமாக சிரித்தார்…
“பத்ரி நாராயணனா?…. நீதான், எதிர்லேயே…. பாத்துண்டுதானே இருக்கே?”.…….
எதிரில் பெரியவாதானே இருக்கிறார்? பத்ரி நாராயணன் எங்கே?
“என்ன ஸந்தேஹமா?……
“ஸந்தேஹமில்ல….. பெரியவா சொல்றது புரியல”
இதோ! ஹிமாலய உண்மை திறந்தது!
தனக்கு மேலே அண்ணாந்து பார்த்தார்……
“மேல பாரு…! இது என்ன மரம்?”
“எலந்தை மரம்”
“ஸம்ஸ்க்ருதத்ல…. எலந்தைக்குத்தான் பதரி….ன்னு பேரு.!… தெரியுமோ?”
“நாராயணா! நாராயணா!”
பாட்டியும், சுற்றி இருந்தவர்களும் பேச்சு எழாமல், கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
ஆம். ‘பதரி மரத்தின் கீழே இருக்கும் நாராயணன், நானே! ‘என்று பட்டவர்தனமாக பெரியவா திருவாக்கில் வந்ததை நேரில் கேட்க அந்தப் பாட்டியும் மற்றவர்களும் என்ன புண்ணியம் செய்தனரோ?
கண் தெரியாத பாட்டி
ஒருமுறை பெரியவா, ஆந்த்ரா தமிழ்நாடு எல்லைப்பக்கம் பாதயாத்ரையாக போனபோது, பரம பூஜ்யர்களான ஓடாச்சேரி ஸ்வாமிகள், அனந்தானந்த ஸ்வாமிகள், திண்ணியம் ஸ்வாமிகள், உபநிஷத் ப்ரஹ்மேந்த்ராள் மடத்து ஸ்வாமிகள், தெனாலி தெலுங்கு ஸ்வாமிகள் ஆகியோரும் பெரியவாளோடு கூடவே நடந்து வந்தார்கள்.
ஆஹா! என்ன ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும்!
பெரியவாளோடு உத்தமமான ஸன்யாஸிகள் எல்லோரும் வந்து கொண்டிருப்பதை அறிந்த பக்தர் ஒருவர் அவர்களுடைய வருகையை எதிர்பார்த்து சாலையோரத்தில், தன் வயஸான பாட்டியோடு நின்று கொண்டிருந்தார்.
பாட்டிக்கோ கண்பார்வை குறைவு! கண்களை இடுக்கி இடுக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதோ! ஸன்யாஸ அலைகளோடு ஸன்யாஸ மஹாஸமுத்ரமே நடந்து வருவது போல், பெரியவா நடந்து, நடந்து இவர்கள் அருகாமையில் வந்துவிட்டார்..!
நின்று கொண்டிருந்த பேரன் சடாரென்று பெரியவா பாதங்களில் நமஸ்காரம் பண்ணினார். பாட்டிக்கோ பாவம்…. ஏழெட்டு காவியுடைகள் நிழலாடுவது போல் தெரிந்தாலும், இதில் பெரியவா எங்கே நிற்கிறார் என்பது தெரியாமல், பாட்டி தடுமாறுவதை பெரியவா கவனித்தார்.
ஆஹா! “யாரோ ஒரு வயஸான பாட்டிதானே! குத்துமதிப்பா நமஸ்காரம் பண்ணட்டும்” என்று அலக்ஷியம் பண்ணாமல், அவளுக்கும் கூட விளங்கும்படி தன்னைக் காட்டிக் கொடுக்க பெரியவா கையாண்ட அனுக்ரஹம்… கண்களில் கண்ணீர் வருகிறது.
மெல்லத் தன் பாதுகைகளை ‘தட் தட்’ என்று, வழக்கமே இல்லாத புது வழக்கமாக, தரையில் தட்டி ஒலி எழுப்பினார்.
எதற்காக?
ஸாதாரணமாக பெரியவாளோடு பாதயாத்ரையாக போகும்போது, கூட நடக்கும் பாரிஷதர்களும், பக்தர்களும் ஏன்? எத்தனை பெரிய ஸந்யாஸியாக இருந்தாலும், செருப்பு போட்டுக் கொள்ள மாட்டார்கள்!
ஜகத்குரு இல்லையா?....
பாட்டிக்கு கண் பார்வைதான் குறைவாக இருந்தது. ஆனால், புத்தி தீக்ஷண்யம் அபாரமாக இருந்ததாலும், யதி தர்மம் அறிந்திருந்ததாலும், ‘பெரியவா மட்டுந்தான் பாதுகை போட்டுக் கொண்டிருப்பார். ஆகையால் பாதுகையை தட்டும் ஒலியும், பெரியவாளிடமிருந்துதான் வந்திருக்கும்’ என்று ஸரியாக ஊகித்து, நம் பெரியவா முன்னால் வந்து விழுந்து வணங்கினாள்.
பெரியவாளின் பக்தானுக்ரஹ அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! அல்பங்களான நமக்கும் பெரியவாளை ‘தெளிவாக’ நமக்குள் காண, பெரியவாதான் தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும் என்று ஸதா பிரார்த்தனை பண்ணுவோம்.
பட்டுப்பாட்டி
கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி, பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.
பெரியவா ஸதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள்.
அப்போது நல்ல குளிர்காலம்!
ஒருநாள் காலை, தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்…
”இந்தா… பாலு! இந்தக் கம்பிளிய கொண்டு போயி, பட்டுப் பாட்டிட்ட குடு”
“ஸெரி……”
வாங்கிக் கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.
நள்ளிரவாகிவிட்டது!
பெரியவா படுத்துக் கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!
“பாலு!……”
பெரியவாளின் மதுரக்குரல் கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்….
“ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”
“ஆஹா! மறந்தே போய்ட்டேனே!…”
தூக்கிவாரிப் போட்டது!
“இல்ல பெரியவா…… மறந்தே போய்ட்டேன்”
பெற்றவளுக்கு மட்டுந்தான், தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய வெளித் தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல், எப்போதுமே குழந்தையாகவே பார்க்க முடியும்!
“ஸெரி…. இப்போவே போயி, அவ.. எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா”
“இந்த நடுராத்ரிலயா? குளுரான குளுரு! எங்க போய் பாட்டிய தேடறது?….. காலம்பற குடுத்துடறேனே பெரியவா!…”
தெய்வக் குழந்தை அடம் பிடித்தது!
“இல்ல..! இப்பவே குடுத்தாகணும்! என்னடா… நீ?… ராத்ரிலதான குளிர் ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!”
கம்பிளியை எடுத்துக் கொண்டு, அந்த அர்த்த ராத்ரியில் வீடுவீடாக அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் மிதித்து விடாமல், உற்று உற்று பார்த்து, கடைஸியில், கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!
“பாட்டி! ….பாலு…..”
“ம்…என்னப்பா?….என்ன வேணும்?..”
தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது…. பாலு அண்ணா சொன்னது…..
“பெரியவா…. இந்தக் கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி, காலமேயே சொன்னா! மறந்தே போய்ட்டேன்! பெரியவா, இப்போ ஞாபகமா கேட்டா! குடுக்கல-ன்னதும், ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச் சொன்னா! இந்தாங்கோ..”
“பெரியவாளா!!…..என்னப்பனே! இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!…”
பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு ஏதாவது அளவு இருக்குமா என்ன? கதகதப்பான கண்ணீரோடு, கம்பிளிக்குள் முடங்கினாள்.
பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனை அணைத்து, பரம ஹிதத்தை குடுத்தது.
ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி






நீல மேக ஸ்யாமளன்


Feb 9, 2019

Malai Nadu Yatra (திரு வித்துவக்கோடு, திருநாவாய், திருமூழிக்களம், திரு காட்கரை and few other temples) Travelogue - PART1


Jai Sri Lakshmi Nrusimhaya namaha

Sri Maha periyava thiruvadigale saranam
Sri Mukkur Lakshmi Nrusimhachariyar thiruvadigale saranam

We went for 3 days yatra to Malai nadu temples (4 divyadesam around Guruvayur and few other temples) .

Very soothing and blissful days of our life

No electric lights in any of the temples and people who do puja in temple doesnt seem to work for money.   We have bought dried fruits / nuts for neiveidhyam and in each temple the temple gurukal / archagar did atleast 15 min pooja and offered the flowers & dried food to God.

We could see that the  temple gurukal / archagar doing nithya pooja even when there is no crowd or not even a single person other than pujari in the temple. 

Imagine calm, divine, soothing atmosphere and a garbhagraham filled beautifully aligned ghee lamps, in the midst your kuti guruvayoor krishanan with four hands, chubby cheeks, magical smile, simple vastram , simple garland and in chandana alakaram. Thats how most of the temples are.  out of the world feeling.

Thirumoozhikkalam Lakshmana swamy


Same is true for Sivaperuman / Bagavathi  temple..

  • Day 1 3rd Feb Sunday - 
    • reach GuruVayur, 
    • Thriprayar Sri Ramar temple, 
    • Mammiyur Shiva Temple, 
    • Lunch in Brahmana Samooham 
    • Evening Thiruvithuvakkodu Divyadesam and 
    • Thiru Naavaay Mukunthan Divyadesam


  • Day 2 - 4th Feb Monday - Thai Ammavasai. 
    • Guruvayur Krishnan, 
    • Kodungalur Bagavathy amman , 
    • Thiruvanchikulam Mahadeva Temple, 
    • Thirumoozhikkalam Lakshmana swamy Divyadesam, 
    • Night Stay in Kalady (Birth place of Sri Adishankarachariyar)


  • Day 3 -  5th Feb Tuesday - 
    • Kalady Sri Adishankarachariyar Darishanam, 
    • Krisnan temple (Kuladeivam of Sri Adishankarachariyar), 
    • Thirukkaatkarai appan Divyadesam, 
    • Chottanikkarai Bagavathi Amman, 
    • Vaikkam Sri Mahadevar Temple, 
    • Sree Narasimhaswami Temple, 
    • Muriyamangalam



Food
Food in GuruVayoorGuruvayur brahmana samooham +91 487 255 3499 / 0487 2562221Mr. Siva Rama Krishnan 9895392251 lunch served between 12 - 2pm. If you want to contribute for 1 day meals its 2500rs. You can contribute whatever you feel like.
 Other options.
Breakfast Ganapthy Bhavan, Lunch & Dinner Ramakrishna LunchNandini Vegetarian Restaurant

Guruvayur Stay

Stay - We stayed in mayura residency guruvayur. Rooms are good. AC rooms roughly @ 3000rs per day. I felt its bit costly. I also didnt like the complimentary buffet. 


Kalady Stay

Phone: 0484-2462350, 0484-2465922Mr. Surya - Feb4th Night Stay in Kalady. (9846749473)Feb 5th - Ganapathy Homam from 6.30-7.30am  400 Rs only



ICabs Contact
We used i CABS taxi guruvayur. very good service from them at reasonable price.12 seater Traveller 100 km / 3500 per day. each extra km 20rs
Cab Contact - Srijith Guruvayoor Icabs +91 70340 70341
 https://www.google.com/maps/place/i+CABS+taxi+guruvayur/@10.5954583,76.0457153,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba794f2d39a7027:0x5c5703d95a6529f6!8m2!3d10.595453!4d76.047904


Temple and contact details:


திருப்பிரயார்  - ஸ்ரீ ராமர் கோவில் 

0487-2391375 /  +91 487 239 1375
03.30 am to 12.00 pm
04.30 pm to 08.30 pm

1. Sri Ramachandra Prabhu with four hands- Jaba malai - with Sri Devi and Bhu Devi Thayar. 
2. Dhrishtaa seetha Hanumaar.
3. Dakshinamoorthi Sanithi, Ganapathy, Sastha, gopala krishnar sannithi.
4. Vedi and Fish food


திரு வித்துவக்கோடு

5am-1030am and 5pm-7pm
Contact : Ravichandran and Ramachandran Embranthari @ 98460 92853

1. பெருமாள் அம்பரீஷ மன்னனுக்கு “ பிரத்தியும்னன்அநிருத்தன்பரவாசுதேவன்சங்கர்ஷணன் “ அப்படின்னு நான்கு வடிவங்களில் காட்சி தந்த தலம் இந்த திருவித்துவக்கோடு. 

2. பஞ்ச பாண்டவர்கள் கட்டிய கோவில் .மூலவர் உய்யவந்த பெருமாள் / அபயப்ரதன்

3. காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி

4. ஐந்து மூர்த்தி ஸ்தலம்

5. வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*
மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*
மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே





திருநாவாய்

5am-10am (till 1130am on Sundays) and 5pm-7.30pm
Narayana Namboodari @ 0494 2603747 or 93876 34946
Gireesh - 97451 16998

1. நாவாய் முகுந்தன். நவ யோகி ஸ்தலம்

2. நான்கு திருக்கரங்களோட , சங்கு சக்கரம் கதா பத்மம் ஏந்தி , மந்தகாச புன்னகையோடு, அருள் பொழியும் திரு கண்களோடு.. அழகான சேவை ... இன்றும் நாவாய் முகுந்தன் திருப்பாதம் ,பூமிக்குள்  புதஞ்ச மாதிரி இருக்கும்.

3. கஜேந்திராழ்வாரும் , மஹாலக்ஷ்மி தாயாரும் போட்டி போட்டு பூ பறிச்சு பூஜை செய்த ஸ்தலம்

4. ஆற்றை கடந்தோம்னா , சிவபெருமானுக்கும், ப்ரஹ்ம தேவருக்கும் தனி கோவில் உண்டு. அதனால இந்த ஷேத்திரத்தை திரு மூர்த்தி ஸ்தலம் அப்படின்னு சொல்றாங்க

ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் சமேத , நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்



குருவாயூரப்பன்

3am Nirmalya Darshan
closes @ 12.30pm
Evening 4.30pm till 9 or max 10pm

1) உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தந்தருளிய விக்ரஹம்.

2) பிரகஸ்பதி (குரு)+ வாயுவின் - சிவபெருமான் உத்தரவின் படி அமைத்த கோவில். அதனால் குரு வாயூர் என்று அழைக்கப்படுகிறது.

3)  நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதா, பத்மம் ஏந்தி புன்சிரிப்புடன் அழகிய உண்ணிக்கிருஷ்ணன் இவன்.

4) சகல விதமான நோய்களுக்கும் அருமருந்து இந்த அமுதன், கிருஷ்ணன்,
குருவாயூரப்பன் திருவடிகளே கதி




மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம்

04:45 am - 12:30pm
04:45pm -  08:30pm

வாயுவின் உதவியோடு பிரகஸ்பதி (குரு) உலகம் முழுவது அலைந்து கிருஷ்ணரின் பாதள அஞ்சன விக்ரகத்தை செய்ய மிகவும் புனிதமான மற்றும் பொருத்தமான தலத்தைத் தேடினார். அப்போது பரசுராமரின் வேண்டுகோள்படி கேரளா வந்தனர் வாயுவும் குருவும். அப்போது ருத்ர தீர்த்தத்தில் நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் அங்கே ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் தவம் செய்து வருதலையும், தாம் ருத்ர கீதையை உபதேசம் செய்த தலமும் அதுவே என்று கூறி, கிருஷ்ணரின் விக்கிரகத்தை அங்கேயே வைக்கலாம் என்று உறுதி செய்து அருளினார்.

எனவே குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.


கொடுங்கல்லூர் பகவதி அம்மன்

4am - 12 noon
4pm - 8pm
480 280 3061


1) கருவறையில், ஏழடி உயரத்தில், எட்டுக்கரங்களுடன், பலாமரத்தாலான சிற்பமாக அருள்பாலிக்கிறாள் கொடுங்கல்லூர் பகவதி.
2) தேவி பத்திரகாளி வடிவெடுத்து, தாருகனை வதைத்ததாக தலபுராணம் சொல்கின்றது.
3) இன்னொரு கருத்தின்படி, மதுரையை எரித்தபின், சேர நாட்டுக்கு வந்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள்.
4)ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் ஆறு சிறிசக்கரங்களே, இத்தேவியின் வரமருள் திறத்துக்குக் காரணம்.


திருவஞ்சிக்குளம் மஹாதேவர்

Phone +91 480 281 2061
5:00AM - 11:00 AM,
5:00PM - 8:00 PM



1. தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் இந்ததிருவஞ்சிக்குளம் மஹாதேவ சுவாமி கோவில்
2. சுந்தரர் சில காலம்  சேரமானோடு கொடுங்களூரில்  தங்கி திருவாஞ்சிக்குள   ஆலயத்தில் மகாதேவனை தரிசித்து வந்தார் . பின்பு இந்த இரு சிறந்த சிவனடியார்களும் கைலாசம் சேர்ந்து போகிறார்கள்.
3. சிறந்த சிவனடியாரை பணிந்து தொழுவதால்  கைலாஸ பதவியும் தேடாமல் கிடைக்கும்


திருமூழிக்களம்
லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்

5am-11am, 5pm-8pm
+91 4842470374


1. லக்ஷ்மணர்தான் பரதருக்கு மனதால் இழைத்த தவறுக்கு  பிராயச்சித்தமாக ஸ்ரீமன் நாராயணருக்கு ஒரு கோவில் கட்டி வழிபட்ட இடம் தான் இந்த திருமூழிக்கலம் .
2. திருமூழிகளத்து பெருமாள் திருநாமம் ஸ்ரீ ஸூக்தி நாதர் ஏன் என்றால் - ஹரித மகரிஷிக்கு  ஸ்ரீ ஸூக்திகளை தந்தருளிய பெருமாள் இவர்.
3. நம்ஆழ்வார் பத்து பாசுரம் படியிருக்கார். நாயகி, நாயகனுக்காக பறவைகளை தூது விடுவது போன்ற பாசுரங்கள்.(தக்கிலமே கேளீர்கள்)
4. ஸ்ரீ மதுர வேணி நயிகா சமேத ஸ்ரீ ஸூக்தி நாத பெருமாள் திருவடிகளே சரணம்.



Kalady

5 am to 11.30am
4 pm to 8 pm
Surya (9846749473)

Kalady, the holy birth place of Jagadguru Adi Shankara Bhagavadpada is a beautiful village with rustic simplicity and serenity . It is situated very close to the river Periyar(Poorna).
Main Deities - Sri Sakti Ganapati, Sri Sharadamba, Adi Shankara 
Samadhi of Aryamba (Holy mother of Sri Shankara)


Sri Krishna Temple - Kalady
Sri Kumar Namboodari 9388862321,
5am-10.30am

This temple is just one compound from Kalady Sringeri Mattam.







Thirukkaatkarai
5:00AM - 11:00 AM,
5:00PM - 8:00 PM

S. Venkatan @ 99952 16368 or 97475 36161
Vinod @ 94462 05706

ஸ்ரீ வாமன மூர்த்திக்கான மலைநாட்டு திவ்யதேசம் இது.
கபில முனிவருக்கு பெருமாள் - வாமன மூர்த்தியா சேவை சாதிச்ச இடம்.
கரை அழிக்கும் காட்கரை.





சோட்டாணிக்கரை பகவதி அம்மன்

4am till 12 noon
4pm till 9pm
0484 - 2711032 , 2713300

இங்கே லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்னும் மூன்று உணர்வு நிலைகளோடு தேவி திகழ்கிறாள்.
காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்நண்பகலில் சௌபாக்கியம் தரும் ன்னை மகாலட்சுமியாக,
ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.

தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. 'அம்மே நாராயணா', 'தேவி நாராயணா' என்று மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.



Sree Narasimhaswami Temple, Muriyamangalam
+91 94970 23521

The 'Prathishta' of this temple is in the form of four handed Lord MahaVishnu ('Chaturbaahu'), facing west, emerging out of the sacred fire of the 'homa'. The 'Aayirakudam' Abhisheka is performed daily to [subside/reduce] the heat generated from the sacred fire. The 'Vigraha' is 5 feet tall.