ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே. - சுவாமி நம்மாழ்வார் - திருவாய்மொழி - 2.4.1
Search This Blog
Dec 29, 2018
Nov 29, 2018
Nov 23, 2018
Nov 22, 2018
Nov 21, 2018
Oct 30, 2018
மன அமைதி
இரவில் சிறிய பிரச்சனை கூட பெரிதாக தெரியும் ... அதனால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பலர்.
தூக்கம் வராமல் குழம்பி தவிக்கும் இரவுகளில் நான் இதை திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லுவேன் ...
சில நிமிடங்களில் மனம் அமைதி ஆகும் ...
முழுவதுமாக இதை சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை... சில வரிகள் போதும் ...
கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள்,
அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
"நான் உடம்பு அல்ல ... நான் ஆத்மா ...எத்தனையோ பிறவிகளில் இதுவும் ஒன்று ... "
அதுவும் இல்லாவிட்டால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆரம்பிப்பேன் மனதிற்குள் .. சொல்லி முடிக்க வேண்டும் என்பது இல்லை - ஆயிரம் நாமக்களில் இருந்து ஆரம்பித்தால் போதும்... தானாக தூக்கம் வரும் ...
முயற்சித்து பாருங்கள்.
சர்வே ஜனா சுகினோ பவந்து.
Oct 25, 2018
SRI NARASIMHA DARSHANAM 53 - NIMBACHALAM - BHEEMGAL
http://www.nimbachalam.org/
Shriman Nimbachala Mahatyam (Sthala Puranam)
Shri Nimbachalam is one of the famous hill shrine temples of Lord Shri Laxmi Nrusimha Swamy. This hill shrine is located in Nizamabad District of Telangana 5 kilometers away from the temple town of Bheemgal. The main temple cave is situated on the pious, sacred Hillock that shines with golden tower. This Sthalapurana, with the name of Shriman Nimbachala Mahatmyam, is in the “Brahma Vyvarthaka Puranam” which is one amongst the “Ashtadasa Puranas”. According to Sthalapurana this hillock is two yojanas (26 Kmts) away on the south side of Goutami river.This Puranam says that Lord Nrusimha was pleased by the penance of Brahma and Prahlada and upon their prayer he has conceded their wish to stay back on that sacred hill. Shri Nrusimha Swamy, with his consort Shri Mahalaxmi sitting on his left thigh, is accompanied by Naranarayana (Krishna, Arjuna) and Parama Vaishnava Hanuman, Bhagavathothama Garuda and Shri Man Madhwacharya. It is the second temple in India after Badrinath where Swayambhu Naranarayana are worshipped at one place. In order to serve His Holiness, the gods from heaven have taken the shapes of rocks and trees on the hillock. In the early days, this Puranam (sthala Puranam) was told by the great Rishi Sutha to Shounakadi rishis, by Shri Vedavyasa deva to Janamejaya raja, Markandeya to Maharaja Chandragupta, by Vashishtha Mahamuni to Mandhata Maharaja as katha-parampara in detail. The word Nimbachalam is the combination of two Sanskrit words “Nimba” and “Achalam”. “Nimba” literally means “Neem” tree and “Achalam” means "one that does not has movement or life i.e. a hill". As it was covered by Neem trees it got this name.
Oct 23, 2018
வராஹ மூர்த்தி சொன்ன 3 விஷயங்கள்
ஸ்ரீ முக்கூர்
லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்:-
வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. 'உத்ரிதாமிவராஹேணா' என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.
யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி,
''உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்கிறார்.
அதற்கு பூமாதா சொல்கிறாள்.
ஸ்ரீப்ருத்யுவாச -
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ
''உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?'' என்று பூமாதா கேட்கிறாள்; 'ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு' என்கிறாள்.
ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம்
என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.
'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்' என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.
'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்' என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.
'கல்பாதௌ
ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்' என்று
அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப்
பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள்.
அப்போது பகவான் 3 விஷயங்கள்
சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை
ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
ப்ரபதன சுலபன் அவன் - ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது
திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது.
இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!
ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்' என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். 'அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்' என்கிறார் பரமாத்மா.
பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது.
HH Srimath Srimushnam Andavan & Sri Parakala Jeeyar Mangalasasanam at Kallahalli Varahanatha Swami temple
Oct 18, 2018
Sri Samputa Narasimha
Source http://www.subrahmanyamatha.com/
The speciality of Kukke Subrahmanya Matha lies in the fact that the powerful Samputa is present here. When Jagadguru Sri Madhwacharya had gone to the Himalayas to write commentaries on the Hindu Scripture under the guidance of the great Sri Ved Vyas, Ved Vyas had given him 8 Vyasa Mushti Saligrams. Sri Madhwacharya took 5 of these along with 144 Lakshmi Narayana Saligrams and 1 Lakshmi Narasimha Saligram and put them inside a Samputa. It is this Samputa that eventually became known as the Narasimha Samputa. It is said that Sri Madhwacharya adored this Samputa so much so that the scriptures called this Samputa as Sri Madhwacharya's heart. When Sri Aniruddha Theertharu was serving as the first pontiff of this Matha, the then king (of the local area) Ballalraaya tried to break open the Samputa by placing it under an elephant's feet. Instead of the Samputa breaking open, the elephant died on the spot. The apologetic and regretful King realized his mistake and donated his monetary possessions to the Matha.
Who founded the Matha?Sri Madhwacharya gave Sanyasa Initiation to Sri Vishnu Theertharu (his brother) and made him the head of the Matha. Sri Vishnu Theertharu left behind the Samputa Narasimha, Vyaasa Mushti, Vithala and Rukmini and Satyabhama, and a smiling Lakshmi Narasimha to the Matha. Many people believe that Sri Vishnu Theertharu is still performing prayers and penance in the Siddha Parvatha since no one has been successful in finding his brindavana. It is also said that initially, Sri Vishnu Theertharu had carried the Samputa with him, but ended up sending it back to the Matha via the Kumara Dhaara River at the request of Sri Aniruddha Theertharu.
Njanappana with its beautiful meaning in english
Take sometime for yourself and read the attached pdf...
Made me weep...
I have attached Njanappana sung by P.Leela as mp3,
you tube version of the same.
and Njanappana pdf text with meaning.
Njanappana can be considered as
the Bhagavad Gita of Malayalees. This is a Darshanika kaavyam or philosophical
poem expressed in the simplest Malayalam language for ordinary people. Poonthanam
Nambudiri, an ardent devotee of Shri Guruvayurappan transformed his unbearable
sorrow from his infant son's death into a "yogavishesham".
He
used this sad experience to build his Bhakthi soudham or house of devotion and opened
it for all devotees of all the time. Even though the language is very simple,
this njaanappana or song of wisdom deals with the essence of all vedas and
upanishads. May
Bhagavan
Guruvayurappan, Bhagavathy Saraswathi Devi and Sri Poonthaanam Nambudiri bless
us to become wiser by going through this great Song of Wisdom!!.
Oct 16, 2018
90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்!
""90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்!"" ---ஸ்ரீ மடம் பாலு
காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்….கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார்.
நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா போகாமல் இருக்கலாமா?" என்று கேட்டேன்.
அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை...மடத்தை நிர்வாகம் செய்கிறார் பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது தான்முறை" என்று சொல்லி விட்டார்.
கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து, தீர்த்தம்,சால்வை, புடவை எல்லாம் வந்தன. பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார்.
என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. நான் போக வில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும்.. போகலாமா?" என்று கேட்டார்.
"ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ, அப்படி ஓர் ஆவல்!"
"என்னை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன்."
"நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய்.." என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன், அவர் கால் சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார்.
"அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி போய்ச் சேர்ந்தோம்."
கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு மாலை சார்த்தி புடவை சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து, ஆச்சார்யாள் சன்னிதிக்கு வந்து தரிசித்து, அங்கேயே வாய் திறந்த வாறு படுத்து விட்டார்.. அவ்வளவு அசதி.
அப்போது அவருக்கு தொண்ணூறு வயசு... பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார்.
"மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து, ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார். உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம்செய்தவர் மஹாபெரியவா தான்!"
அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர் நடந்து கலவை சென்றுவிட்டார்!
"இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!"
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.
Oct 12, 2018
Sri Narasimha Darshanam 14- Ugra Narasimha Swamy Temple Maddur
The Ugra Narasimha Swamy Temple situated in Maddur a place in between Bangalore and Mysore has a Special significance.
The Sthala Puranams says that In Dwapara Yuga Arjuna asked Lord Sri Krishna the he wished to see the Narasimha Avatara , for that Lord Sri Krishna told that it is not possible but he can arrange for a darshan of Ugra Narasimha and he asked him to proceed to the present day Maddur. The old timers say the Maddur was known as Arjunapuri also . Purans says that Sri Kadamba Rishi lived here and worshipped the Lord due to this it is also know as Kadamba Kshetra and Nadi which is flowing here is also know as Kadamba Nadi.
Now we enter the Small and compact temple of Lord Ugra Narasimha Swamy of Maddur. And here Swamy gives you darshan with eight hands and Three eyes which is a very rare sight. With two hands he is tearing the Asura Hiranya Kasipu who is lying in his lap, with other two hands he is wearing the Hiranya Kasipu's Intestine as Mala, then in the other two hands he is holding Pasha and Ankusha and in other two hands as usual he is holding the Shanku and Chakara. At the feet of lord our Garuthaman stands on left side and on the right Bhaktha Prahalada is standing in Posture doing Namskaram.
It is said that Swamis third eye came when he was doing the Hiranya Kasipu's Samhara. It is very rare to see a Thinetra Dari Narasimha ( Here we can recollect the the Narasimha Sostra which describes the lord Narasimha as Jwala Kesham , Tri Netram)
Now we have the darshan of our Lord Ugra Narasimha and come out. Then we see a Sannidhi for Lord Srinivasa, Then next Sannidhi is of Matha Yashode breast feeding Our Lord Kuti Krishnan It is also a rare
Murthy , then we step into praharam and on the left side corner we find Goddess Sowmiya Nayaki and then after having her darshan we move to right side corner and we see Goddess Narasimha Nayaki. Then we walk further we come across Sannidhi of Patabhishekam Ramar then once we come out of praharam we immediately find the Sannidhi for Udayavar, Namalwar and Swami Desikan.
It is said these temples were reconstructed during the period of Hoysala Kings regime. It is said if you pray sincerely and say that you will do Thirumanjanam to Lord your wishes will be fulfilled . It is also said that if childless couple do Thirumanjanam and then after manjalkappu of perumal is taken out and put in a vessel and with that the childless couple is given a bath and then the couple will be blessed with a child. One more thing is also done, If you land up without notice and somebody else is doing the Thirumanjanam then you can pay some token amount to the person who is getting the Thirumanjanam done and then you can undergo the same ritual as mentioned above.
Sri Varadaraja Temple
Sri Varadaraja Temple is situated to the left side of Sri Ugra Narasimha temple. The mother of Hoysala king Sri Vishnu Vardhana had lost her eye-sight. King Vishnu Vardhana was a disciple of Sri Ramanujacharya. The great Sage Sri Ramanuja, suggested him to visit the temple of Sri Varadaraja in Kanchipuram. By the darshan of the Lord, his mother’s eye-sight would be cured. Mother was aged and it was not possible for her to travel all the way till Kanchi. Hence few sculptors from Kanchi were called to this place and they carved an exact replica Deity of Sri Kanchi Varadaraja. The Deity was then installed and worshiped with great-grandeur. The mother of Vishnu Vardhana regained her eye-sight when she looked at the Deity of Sri Varadaraja. From then on the Lord is also glorified as Kanchi Kannvaradaraja Swamy. In Kannada ‘kann’ means eyes, ‘vara’ means benediction.
Oct 9, 2018
கனகதாரா ஸ்லோகம் - தமிழில்
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம்
வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த
ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.
ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய
உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும்,
ஸ்ரீதேவியை இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின்
மனைவியாக வழிபடவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின் இவ்விரு
தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் -
சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட இயலும்?
இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ.
சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும், மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.
மூல முரட்டு சமஸ்கிருத சுலோகங்களை விடவும் அழகான இந்த
தமிழ் பாசுரங்களைப் பாடினாலே ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய்க் கிட்டும் என்பது
என்னுடைய கருத்து.
கனகதாரா ஸ்தோத்திரம்
மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற
பொன்னிறக் கருவண்டுபோல்
மாதவன் மார்பினில் வாசம்பு ரிந்தங்கு
மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்
பரவும்பல் வடிவத்தின் செல்வவள மாகிடும்
திருமகளின் அழகுவிழிகள்
பரிவோடு தந்தஇரு விழிகளின் கடைநோக்கு
மங்களமெ னக்கருள்கவே (1)
நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து
உலவிடும் பெண்வண்டுபோல்
நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற
ஆசையால் மேல்சுழன்று
கோலங்கண் டுஉடன் நாணமேற மீண்டும்
கீழ்வந்து மேல்சென்றிடும்
குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில்
செல்வமெல் லாம்தருகவே (2)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய
முகுந்தனைக் காணும்விழிகள்
ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது
இனிமையை வார்க்கும்விழிகள்
மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்
பள்ளிகொள் ளும்பரமனின்
மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்
செல்வசுகம் யாவுமருள்க (3)
எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப
மார்பினில் வாழ்கின்றதோ
எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச்
சரமாய் ஒளிர்கின்றதோ
எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின்
தேவைகளைத் தருகின்றதோ
அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள்
மங்களமெ னக்கருள்கவே (4)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும்
விஷ்ணுவின் திருமார்பினில்
நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலா கிஅகில
உலகுக்கும் தாயுமாகி
பார்கவ குலத்தினில் அவதரித் துபூஜை
செய்வதற் குரியதாகி
பரிமளிக் கும்வடிவம் எதுவோஅது என்னில்
மங்களம் பொழியட்டுமே (5)
மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட
மாயன்வை குந்தன்நெஞ்சில்
மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை
மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்
மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த
கடல்குமரித் திருவின்பார்வை
புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை
என்னையும் அருளட்டுமே (6)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்
வேடிக்கையாய்க் கொடுக்கும்
முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும்
ஆனந்தம் தந்துநிற்கும்
நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்
நளினமாய்த் தோன்றிநிற்கும்
நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது
கணமேனும் பொழியட்டுமே (7)
மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச்
செய்கின்ற தகுதிஇல்லா
மனிதருக் குங்கூட எந்தகரு ணைப்பார்வை
சொர்க்கத்தைத் தருகின்றதோ
அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை
மலர்மீது வீற்றிருக்கும்
அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு
தேவைகளை அருளட்டுமே (8)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக்
கூட்டியே வந்துநிற்கும்
திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட
கரியமா வண்ணமேகம்
ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக்
குஞ்சுகளாம் எங்களுக்கு
செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி
வளமெலாம் அருளட்டுமே (9)
கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
நாயகியே போற்றிபோற்றி (10)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
வேதவடி வினளேபோற்றி
நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
ரதிதேவி போற்றிபோற்றி
எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில்
அமரும்மலர் மகளேபோற்றி
எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ
உத்தமனின் துணையேபோற்றி (11)
செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட
திருமகளே போற்றிபோற்றி
மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய
மாமகளே போற்றிபோற்றி
சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன்
பிறந்தவளே போற்றிபோற்றி
நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே
நிலமகளே போற்றிபோற்றி (12)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும்
செந்திருவே போற்றிபோற்றி
தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற
நாயகியே போற்றிபோற்றி
தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும்
செல்வமே போற்றிபோற்றி
சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின்
இல்லறமே போற்றிபோற்றி (13)
ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே
தேவியே போற்றிபோற்றி
திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
திருமகளே போற்றிபோற்றி
கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே
லக்ஷ்மியே போற்றிபோற்றி
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா
மோதரனின் துணையேபோற்றி (14)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும்
கொண்டவளே போற்றிபோற்றி
உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல
நாயகியே போற்றிபோற்றி
அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும்
அலைமகளே போற்றிபோற்றி
நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின்
நாயகியே போற்றிபோற்றி (15)
செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்
பெற்றிடச் செய்யும்தாயே
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்
தருகின்ற கமலநயனீ
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்
அஞ்ஞானம் நீக்குபவளே
செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
என்னையே என்றுங்காப்பாய் (16)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று
செல்வங்கள் யாவற்றையும்
முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய
கடைக்கண்ணின் கருணைநோக்கு
அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும்
திருமகளே உனதுநோக்கு
உன்னைஎன் மனதாலும் மெய்யாலும் சொல்லாலும்
துதிசெய்து புகழ்கிறேன்நான் (17)
பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக்
கையேந்தும் பதுமநிதியே
புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன்
ஒளிர்கின்ற செல்வச்சுடரே
பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே
நெஞ்சமெல் லாம்அறிந்தோய்
ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே
என்னிடம் கருணைகாட்டு (18)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தேவகங் கைநதியின் தெளிவான தூயநல்
நீரினைப் பொற்குடத்தில்
திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத்
திகழ்கின்ற தெய்வஅழகே
தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம்
யாவிற்குமே அன்னையே
தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே
காலைஉனைத் துதிசெய்கிறேன் (19)
அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின்
ஆனந்த காதலிநீ
ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில்
முதல்வனாய் நிற்பவன்நான்
அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக் கண்களின்
பார்வைக்கு ஏங்கிநிற்கும்
அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும்
என்னைநீ காணவேண்டும் (20)
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகி னிற்குந்தாயாம்
மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்
நிதம்புகழும் மனிதர்எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்
செல்வமெல் லாம்பெறுகிறார்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர
பாக்கியம் பலபெறுகிறார் (21)
Subscribe to:
Posts (Atom)