Ayappa Bakthar |
இன்று திருச்சி மலைக்கோட்டையில் ஜயப்ப பக்தர் ஒருவரை சந்தித்தோம்..
மற்ற ஜயப்ப பக்தர்கள் போல் அல்லாமல் இவர் நடைபயணமாக சபரிமலை செல்கிறவர் என்பது பார்த்த உடனே தெரிந்தது..
சரி விசாரிப்போம் என அவரிடம் பேசிய போது மிரட்டி விட்டார்..
அவரது பெயர் ரவிந்தீர்ரெட்டி.. சொந்த ஊர் ஆந்திரா...
தமிழிலேயே பேச தொடங்கினார்..
அங்க இருந்தா நடந்து வர்றீங்க என்றோம் ..
இல்ல இல்ல மத்திய பிரதேசம் உஜ்ஜைனி கோவிலிலிருந்து நடை பயணமாக கிளம்பி நடந்து வருகிறேன் என்றார்...
அங்கிருந்து ஏன் என்ற போது அவரது ராசி நட்சத்திரத்திற்க்கு ஏற்ற கோவில் என அங்க இருந்து கிளம்பி சக்தி பீடங்கள் தரிசித்து கால்நடையாக நடந்து வருகிறேன் என்றார்..
தனியாகவா என்ற போது, ஆமாம் கூட்டமாக அல்லது துணையுடன் வந்தால் பேச்சு பேச்சு என சிந்தனை வேறு பக்கம் திரும்பும் ..இது ஒரே சிந்தனையுடன் தன்னை தானே ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள தனியாக தான் கிளம்பி உள்ளேன் என்றார்.
இது எத்தனையாவது ஆண்டு சபரி மலை என்றோம்..இது 14 வது முறை...தொடரந்து 7 வது முறையாக நடந்து செல்கிறேன் என்றார்..
கடுமையான பயணம், தனியாக செல்ல வீட்டில் எப்படி சம்மதித்தாங்க என்றோம்..தனியாக எங்க போகிறேன் ஐயப்பன் என்னுடன் வருகிறான் நான் எங்க தனியாக போவது ,குடும்பத்தில் ஆரம்பத்தில் பயந்தாங்க இப்ப இல்ல...ஆண்டவன் இருக்கான் பாத்துப்பான் என கெளம்பிட்டேன்...நண்பர்கள் தினமும் பேசிடுவாங்க எந்த ஊர் எங்க போகிறேன் என தகவல் தந்துடுவேன் என்றார்..
எப்படியும் 4, 5 மாநிலம் தாண்டி வர்றீங்க மொழி பிரச்சனை, பயம் ஏதும் இல்லையா என்றோம் எல்லா மொழிகளும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..நல்லவங்க இன்னம் இருக்காங்க சார் அவங்களும் மனிதர்கள் பக்தர்கள் தான் எந்த பயமும் இல்லை..இரவு 9 மணிக்கு மேல் தோதான இடம் பார்த்து ஓய்வு அதிகாலையில் எழுந்து பயணம் ..
எத்தனை நாளில் உங்க பயணம் என்ற போது இதுவரை நான்கு மாதங்களில் 4500 கிமீ கடந்து வந்து விட்டேன் 10 நாட்களில் 300 கிலோ மீட்டர் கடந்த சபரிமலை அடைவேன் இன்னம் கொஞ்ச தூரம் தானே என சிரித்து கொண்டே கூறினார்..
நடைபயணத்தில் ஆன்மீக அமானுஷ்ய அனுபங்கள் நடந்து இருக்கா என்றோம்..நிறைய நிறைய நடந்து இருக்கு...சில விஷயங்களை உணர முடியும்...உணர மட்டுமே முடியும் அதை நான் எப்படி சொன்னாலும் உங்களுக்கு புரியாது என நினைக்கிறேன் என்றார்...ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன் நடந்தும் இருக்கிறது என்றார்...
எப்ப சபரிமலையே சென்று சேருவீங்க என்ற போது ஜோதி பார்கக அங்கே இருப்பேன் ..படி பூஜை முடித்து விட்டு விமானம் மூலம் ஊருக்கு திரும்பிடுவேன் என்றார்..
என்ன படிச்சு இருக்கிங்க என்றோம்.
பி.டெக், சிவில் இன்ஜியர் முடித்து பணியில் இருக்கிறேன் என்றார்...
வேற என்னத்த கேட்பது சாமியே சரணம் அய்யப்பா என சரணம் சொல்லி முடித்தோம்..
எங்கள் கலந்துரையாடலை கேட்டு கொண்டே இருந்த போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..நிஜமாகவா, உண்மையாகவா என திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்தனர்...
இதெல்லாம் எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது என அவரிடம் அந்த வெளிநாட்டு பயணிகள் கேட்ட போது .. நான் வெறும் தூசி தான்..என்னை இயக்குவது அதோ அங்கிருப்பவன் என விநாயகரை காட்டினார்...நம்பிக்கை மட்டுமே இங்கே பிராதனம்..ஆழமான இறை நம்பிக்கை மட்டுமே என்னை வழிகாட்டுகிறது.. நான் மட்டுமல்ல என்னை போன்ற பலரின் இறை நம்பிக்கையே எங்கள் தேசத்தையும் காப்பாற்றி வந்தது..இனியும் காப்பாற்றும்...இந்த தேசத்தின் பலம் எங்களின் ஆன்மீக நம்பிக்கை மட்டுமே என முடித்தார்..அந்த வெளிநாட்டினர் இவரை கையெடுத்து வணங்கி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என கூறி வழியனுப்பி வைத்தனர்...
கீழே அவரின் முகநூல் பக்கம் லிங்க்..
Source
No comments:
Post a Comment