Search This Blog

Jun 30, 2018

கிருஷ்ணன் என் குழந்தை ... லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் என் அம்மா அப்பா ..

....
“எனக்கு எழுத வராது. சொல்றேன் . எழுதிப்போடேன்” என்றார் . நான் பதில் சொல்லுமுன்னே தொடங்கிவிட்டார்.

“என் தங்கை மாமனார் மாமியாரோடே ஊரில் இருக்கிறாள். அவளுக்கும் அவள் மாமியாருக்கும் ( அவருக்கு 84 வயது) நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும்.
கோயிலுக்குப் போயிட்டு வருவா “அம்மா, இன்னிக்கு குட்டி க்ருஷ்ணனுக்கு கொண்டையில பூ சுத்தியிருந்தா. சந்தன அலங்காரம் மாதிரி இருந்த்து. ‘வாடீ, வீட்டுக்குப் போலாம்”ன்னு கூப்பிடறேன். மாட்டேன்னுட்டு சிரிக்கறது”

நித்யகல்யாணி மலர்கள் வீட்டில் உதிர்ந்து கிடக்க்கும். அதைப் பொறுக்கி வைத்துப் பூச்சரம் தொடுத்துக்கொண்டிருப்பாள் மாமி.  காலை நீட்டிக் கீழே உக்கார்ந்து, சுவற்றில் சாய்ந்துகொண்டே , நடுங்கும் குரலில் அவள் சொல்லுவாள்.

“சந்துல , செதும்பா ரெண்டு போடு போட்டு, தரதரன்னு இழுத்து, ஒக்கல்ல வைச்சுண்டு வரவேண்டியதுதானே நீ?  அதென்னா, ஒருத்தி ஆசையாக் கூப்படறப்போ வரமாட்டேன்னு அடம், அதுக்கு? எல்லாம் அந்த யசோதை கொடுத்த செல்லம்”

அட, இப்படித்தான் கற்பனையாய்ப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கும்போல என்று நினைத்திருப்பேன். வெகு இயல்பாக தங்கை “ அம்மா, இன்னிக்கு மிளகு ரசம் வைச்சுட்ட்டுமா?” என்பாள்.

“நானே சொல்லணும்னு நினைச்சேன். இவருக்கு காலேலேர்ந்து லேசா இருமல். நேத்திக்கு ”லேசா மழை வர்றமாதிரி இருக்கு, ஒரு பனியனைப் போட்டுக்கும்”ன்னேன். சொன்னதைக் கேட்டாத்தானே இந்த மனுஷன்? சினிமா ஹீரோன்னு நினைப்பு. வெத்துடம்பாப் படுத்துண்டார். இப்ப இருமல். ஓய்.! மிளகு ரசம் தளிகைதான் இன்னிக்கு உமக்கு. ஆமா.”

வெகு இயல்பாக, புருஷோத்தமனையும், புருஷனையும் அன்பாய் அதிகாரம் செய்து ஆள்பவர்கள் நமது பெண்கள்.
...



ஓலாவில் ஒரு உபந்நியாசம்...






என்ன தம்பி நீங்க எங்க சாமிய வெச்சிருக்கீங்க?’ ஓலா காரில் ஏறி, டேஷ்போர்டில் இருந்த அலங்கார லக்ஷ்மிந்ருஸிம்ஹ விக்ரஹத்தைக் கண்டவுடன் கேட்டேன்.
‘அட, இவன் உங்களுக்கும் சாமியா, சரிதான். அவன் தனக்கு வேணுங்கறவங்களைத்தான் வண்டில ஏத்துவான்..’ என்ற கார்த்திக் சிரித்தார்.
‘அது சரி. நரஸிம்மர் விக்ரஹம் எப்படி இங்க..?’ கேட்டேன்.
‘நரஸிம்மனப் பத்தி சொன்னா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன்,’ முக மலர்ச்சியுடன் சொன்ன ஓட்டுனர் மேலும் தொடர்ந்தார்.
‘இவரு எங்கிட்ட வந்தது எப்பிடின்னு தானே கேக்கறீங்க? இவரு என்னோட கத்தாருக்கே வந்தாரு. இவரு இல்லாம நான் இல்லை’ என்றவரின் முகமலர்ச்சி உண்மையாகவே தோன்றியது.
‘ஆமாங்க, கத்தார்ல நம்ம சாமில்லாம் இருக்கக் கூடாது. ஆனா, இவரு இருந்தாரு. அங்ஙன கம்பி கட்ற வேலைக்கிப் போனேன். தினமும் காலைல இவருக்கு ஒரு பத்தி ஏத்தி வெச்சுட்டுப் போயிடுவேன். ராத்திரி எந்த நேரமா இருந்தாலும் வந்து, குளிச்சுட்டு, இவரு மேல தண்ணி ஊத்தி ஒரு அபிசேகம் பண்ணிட்டு, பொறவு தான் நான் சாப்புடுவேன். சனிக்கிழமைகள்ல ஒட்டகப் பால் வாங்கி அபிசேகம் செய்வேன்,’ என்றவர் என்னைத் தனது உலகத்துக்குள் ஈர்த்தார். பின் இருக்கையில் இருந்த என் மனைவி, மகன் முகங்களில் ஆச்சரியக் குறிகள். நீண்ட உபன்யாசத்திற்குத் தயாரானேன்.
‘ஆனா ஒண்ணுங்க. வெறும் கம்பி கட்டற வேலைக்குப் போன என்னை அந்த காண்டராக்ட்ல பல பேர வெச்சு வேலை வாங்கற நிலைக்கு ஒசத்தினார் சார் நரஸிம்மர். பொறவு நான் கம்பியே கட்டல..’
‘அப்புறம் எப்பிடி இங்க, இந்தியால?’ என்றேன்.
‘வந்தப்புறம் ஒரு லாரி வாங்கி விட்டேன். எட்டரை லட்சம் கடன். முழுகிடுவேன் போல இருந்துச்சு. போன மாசம் வரைக்கும் தலை வரைக்கும் கடன். ஆனா, இப்ப வெறும் அம்பதாயிரம் தான் கடன் இருக்கு. அவன் கொடுக்கணும்னு நினைச்சான்னா யாரால தடுக்க முடியும்?’ என்றவரை நம்புவதா இல்லையா என்று மனதில் ஓட, வியப்பில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
‘ஒண்ணு மட்டும் உண்மைங்க. இவன் பேசற தெய்வம். நான் இவனைப் பார்த்து அழுதுகிட்டே இருக்கேன். முன்னாடி இவன் எங்கிட்ட இல்லீங்க. இவன் எங்கிட்ட வந்தது பெரிய கதை..’ என்று தொடர்ந்தவரைக் குறுக்கிடாமல் வாயை மூடிக்கொண்டேன்.
‘மொதல்லயும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப, இவரு எங்கிட்ட இல்லை. டேஷ்போர்டுல பிள்ளையார் பார்க்கறீங்கல்ல அவரு மட்டும் தான் இருந்தாரு. அவரும் நான் செஞ்ச பிள்ளையாரு. நான் எதப் பார்த்தாலும் செஞ்சுடுவேன். பிள்ளையாரு, முருகன், அம்மன் இப்பிடி பல தெய்வங்களைக் கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஒரு மாதிரி முருகன் பைத்தியமாவே இருந்தேன். ஆனா பிள்ளையார், முருகன்னு மாறி மாறி வந்து இப்ப கடைசில நரஸிம்மரப் புடிச்சிருக்கேன்,’ என்றவர் ஒரு நிமிடம் அமைதி காத்தார்.
‘இவுரு எப்பிடி வந்தார்னு சொல்லல இல்ல? டேஷ்போர்டு வெறும இருந்துச்சு. வெச்சா இவரதான் வெக்கணும்னு இருந்தேன். உங்கள மாதிரி ஒரு அய்யிரு ஏறினாரு. நரஸிம்மர் சிலை எங்க கிடைக்கும்நு கேட்டேன். அவுரு ‘கிரி டிரேடர்ஸ்’லன்னாரு. ஒடனே போயி வாங்கிடணும்னு பார்த்தேன். கைவரல. ஒவ்வொரு முறை மயிலாப்பூர் போனாலும் உடனே சவாரி வந்து வேற எங்கியாவுது போயிடுவேன்.
நார்மலா சனிக்கிழமைல வண்டிய எடுக்க மாட்டேன். அன்னிக்கி பெருமாளுக்கான நாள். அவருக்கான பூஜை, கோவில் அப்டின்னு இருந்துடுவேன். ஆனா ஒரு சனிக்கிழமை வண்டிய எடுத்தேன். நரஸிம்மா உன்னை வாங்காம ஓய மாட்டேன், இரு வறேன். இன்னிக்கி எவ்வளாவு வசூல் ஆகுதோ அதை வெச்சு வாங்கறதுன்னு முடிவு செஞ்சு காலைல வண்டிய எடுத்தேன். நாள் முழுக்க சவாரி. அதுவரைல அவ்வளவு சவாரி எடுத்த்தே இல்லை. சரி நரஸிம்மன் ஆழம் பார்க்கறான்னு எல்லா சவாரியையும் எடுத்தேன். பாருங்க, அன்னிக்கி மட்டும் மூணு முறை மயிலாப்பூர் சவாரி வந்துச்சு. ஒவ்வொரு முறை கிரி டிரேடர்ஸ் போகணும்னு இறங்கினாலும் உடனே வேற ஒரு சவாரி வந்துடும். கடைசியா கடை சாத்தற நேரத்துல கபாலி கோவில் சவாரி ஒண்ணு வந்துது. ஆள இறக்கி விட்டுட்டு கடைக்குள்ள ஓடறேன். கடை சாத்தற நேரங்கறாங்க. லைட்டு கூட அணைச்சுட்டாங்க. எப்பிடியாவுது எங்கிட்ட வந்துடு நரஸிம்மானு அழுதுகிட்டே அங்க கேக்கறேன். மேல போங்கறாங்க. நரஸிம்மர் சிலை விக்ரஹம் வேணும்னு அழுதுகிட்டே கேக்கறேன். இருட்டுல ஒருத்தர் எடுத்துக் கொடுக்கறாரு. பார்க்கக் கூட இல்ல. அப்பிடியே வாங்கினு வந்துட்டேன். அன்னிலேர்ந்து இவுரு எங்கூட இருக்காரு.
தினமும் பூ அலங்காரம். வாரம் ஒரு முறை வஸ்திரம் மாத்துவேன். உள்ள பாருங்க,’ என்றார். டேஷ்போர்டில் இருந்த பெட்டியில் பல வண்ணங்களில் வஸ்திரங்கள்.
‘இந்த மண்டபம்?’ என்று கோவிலாழ்வாரைப் பற்றிக் கேட்டேன்.
‘அது இன்னொரு கதைங்க,’ என்று துவங்கியவரைச் சிறிது பொறாமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘நரஸிம்மர் வந்துட்டாரு. அவர வண்டில அமர்த்தியாச்சு, பூவெல்லாம் போட்டாச்சு, ஆனா நாள் பூரா வெய்யில்ல உக்காந்திருக்காரு. நாம ஏஸில இருக்கமே, இவரு இப்பிடி வெய்யில்ல வாடறாரேன்னு மனசு கேக்கல. ஒரு சின்ன குடை வாங்கி வெச்சேன். போதல, ஒரு கண்ணாடிக் கூண்டு செஞ்சு அதுக்குள்ள கார் ஏஸிய விடலாம்னு முயற்சி பண்ணினேன். ஒரு அய்யிரு சவாரில வந்தாரு. அது வேண்டாம். கண்ணாடில்லாம் வாணாம். சின்ன மண்டபம் மாதிரி இருக்கட்டும். காத்தோட்டமா இருக்கட்டும்நு சொன்னாரு. மண்டபம் பலதும் வெச்சு பார்த்தேன். ஒண்ணும் சரியில்லை.
‘அப்பதான் ஒரு சவாரி வந்ததுங்க. ஏறினவரு நரஸிம்மரையே பார்த்துக்கிட்டிருந்தாரு. என்னங்கன்னு கேட்டேன். இல்ல, சோளிங்கர் போகணும். வேளையே அமையலன்னு வருத்தப்பட்டாரு. இங்கன இவரப் பார்த்தீங்கல்ல, இவரு உங்கள கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. ஒரு வாரம் கழிச்சுப் பாருங்கன்னேன். சிரிச்சுக்கிட்டே ‘ ஏம்பா ஒரு மண்டபம் வைப்பா’ ன்னாரு. ‘தேடிக்கிட்டிருக்கேன்’ன்னேன்.
ஒரு வாரம் கழிச்சு போன் பண்றாரு. இங்க வாப்பான்னு ஒரு அட்ரஸ் சொல்றாரு. போயி பார்த்தா பெரிய மரப் பட்டறை ஓனரு. அறுபது பேர் வேலை செய்யறாங்க அவர்ட்ட. என்னப் பார்த்துட்டு ஓடி வராரு. நாலு பேரக் கூப்பிட்டு தம்பிக்கு என்ன மாடல் புடிக்குதோ அதுல ஒரு சின்ன மண்டபம் செஞ்சு குடுங்கறாரு. எனக்குப் புல்லரிக்குது. அவரு எங்க, நான் எங்க. நாலு டிசைன் கொடுத்தாங்க. கடைசில இந்த டிசைன் தான் புடிச்சுது. செஞ்சும் குடுத்தாரு. அதே வாரம் சோளிங்கர் போயிட்டு போன் பண்றாரு.
நான் ஏதோ செய்யறென்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அவன் செஞ்சுக்கறான். நாமெல்லாம் பொம்மைங்க சார். அவன் ஆட்டறான், நாம் ஆடறோம்,’ என்றவர் அவ்விடத்தில் ஒரு சின்ன சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் போல தெரிந்தார்.
‘அன்னிலேர்ந்து பெருமாள் மண்டபத்துல ஒக்காந்துட்டு இருக்கார்,’ என்று தொடர்ந்தவர், ‘ஆங், நான் எப்படி நரஸிம்மர் பித்து ஆனேன்னு கேட்டீங்கல்ல?’ என்று கேட்டவர் தொடர்ந்தார். கேட்டதையே மறந்து நான் அமர்ந்திருந்தேன்.
நெய்வேலி பக்கத்துல முத்தாண்டிக் குப்பம்னு ஒரு ஊர் இருக்கு ( நானும் நெய்வேலி என்பதால் தெரிந்திருந்தது). அங்க கருப்புசாமி கோவில்ல பூசாரியா இருந்தேன்,’ என்றார்.
‘கருப்பு கோவில்ல பூசாரியா? நீங்க வேலூர்ன்னு தானே சொன்னீங்க?’ என்றேன் சந்தேகத்துடன்.
‘சொல்றேன், சொல்றேன். வேலூர் தான். திருச்சில ஐ.டி.ஐ. படிக்கப் போனேன். அங்க முத்தாண்டிக் குப்பத்துல இருந்து இன்னொரு பையன் படிச்சான். அவன் கைல ‘கருப்பு சாமி’ பச்சை குத்தியிருந்திச்சு. என்னன்னு கேட்டேன். சாமின்னான். போயி பார்க்கலாம்னு போனா, கருப்பு என்னைப் புடிச்சு இழுத்துக்கிட்டான். ஐ.டி.ஐ., அப்புறம் கருப்பு கோவில் பூசாரியாயிட்டேன். அப்ப, பெரிய பூசாரி மகாபலிபுரம் பக்கத்துல இருந்து ஒரு சாமி விக்ரஹம் கொண்டு வந்தார். ‘டேய், இது சின்ன சைஸ்னு பார்க்காத. ரொம்ப பவரு. சுத்த பத்தமா இருக்கணும். பேரு நரஸிம்மர்’ன்னாரு. அப்பலேர்ந்து நரஸிம்மர் மேல பக்தி வந்துடுச்சு. ரெண்டர மணி நேரம் ஒத்தக் கால்ல நின்னு, நரஸிம்மா, நரஸிம்மான்னு அவரோட பேரையே சொல்லிட்டு அழுதேன். பொறவு என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவரோட சிலைய வாங்கணும்னு அப்பவே தீர்மானிச்சேன். ஆனா, அவன் தீர்மானிக்கணுமே. அவன் எப்ப நினைக்கறானோ அப்பதான் நம்மகிட்ட வருவான்,’ என்ற கார்த்திக் வேறு தளத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்.
‘நரஸிம்மர் விக்ரஹம் வந்ததும் வண்டில இன்னும் யந்திரம் தான் வெக்கலை. மத்தபடி எல்லாம் பண்ணிட்டேன். பலரும் வருவாங்க, யந்திரம் இருந்தா தோஷம் வரும். அதால வெக்கலை. பாருங்க பெருமாளுக்கு வஸ்திரத்துக்குள்ள பூணூல் போட்டிருக்கேன், தாயாருக்கு கருகுமணி போடணும்னு ஒரு மாமி சொன்னாங்க, போட்டிருக்கேன். சின்னச்சின்னதா கிரீடம், மாலைன்னு செஞ்சு போட்டுக்கிட்டே இருக்கேன். இவருக்கு எவ்வளவு செஞ்சாலும் இன்னும் செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கு. நான் எங்க செய்யறேன். அவன் செஞ்சுக்கறான்.
‘சில மாசம் முன்னால ஒரு வயசானவரு ஏறினாரு. நரஸிம்மன் வந்தா சிவனும் வரணுமேன்னாரு. புரியல விட்டுட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சி மச்சான் சின்ன பஞ்ச லோக சிவ லிங்கம் வாங்கியாந்தான். ஒரு மாசம் வெச்சு பூஜை பண்ணினான். முடியல்லடா, நீ வாங்கிக்கோன்னு எங்கிட்ட குடுத்துட்டான். இப்ப அவரு ஊர்ல ஒரு சின்ன ஊஞ்சல்ல உக்காந்திருக்காரு. சின்ன கலசம் செஞ்சு அதிலேர்ந்து தண்ணி விழறாப்ல செஞ்சிருக்கேன். சிவன் அபிஷேப் பிரியன், ஆனா நரஸிம்மர் அலங்காரப் பிரியர். அதால தினமும் இவருக்கு இங்க பூ அலங்காரம்,’ என்றார்.
நீண்ட நெடிய கலாச்சார விழுமியத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களின் உள்ளும் இறங்கி, வடிந்து, கலந்து, உதிரத்தில் ஓடிக்கொண்டிருப்பதையும், பெருமாள் தனது பக்தர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறான் என்றும் மனதில் ஓட, நானும் ஜானகியும் மகன் பரத்ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
‘எனக்கு ஒரு ஆசையும் இல்லை சார். நம்ம பெருமாளுக்கு ஊர்ல ஒரு சின்ன கோவில் கட்டணும். விதம் விதமா அலங்காரம் செய்யணும். அவன் எப்பவும் குளிர்ச்சியாவே இருக்கணும், அவ்ளோதான் சார்’
‘கல்யாணம் ஆயிடுச்சா?’ என்றேன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள.
‘இல்லை. பார்த்துக்கிட்டிருக்காங்க. ஒரு பாலிஸி உண்டு சார். பொண்ணு ஏழையா இருந்தாலும் எப்பிடி இருந்தாலும் என்னை நம்பி வாழ வந்தா, சுகமா இருக்கணும். அதால ஊர்ல பதினஞ்சு லட்சத்துல கீழயும் மேலயுமா வீடு கட்டியிருக்கேன். அம்மா அப்பா அங்க இருக்காங்க. லாரி ஓடுது. கார் இருக்கு. வர்ற பொண்ணு கஷ்டப்படாம இருக்கும்,’ என்றவரை வாழ்த்துவதா, வணங்குவதா என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.
‘ஓரமா நிறுத்துங்க. ஏ.டி.எம்.ல பணம் எடுக்கணும்’ என்றவனிடம், ‘நீங்க பணம் கொடுக்கல்லேன்னாலும் பரவாயில்லீங்க. பெருமாளுக்குப் பிரியமானவர் நீங்க,’ என்றவருக்கு என்னிடம் பதில் இல்லை.
ஒரு ஏ.டி.எம். கையிருப்பை மட்டும் காட்டி, பணம் தர முடியாது என்றது ( ஐ.சி.ஐ.சி.ஐ.). வண்டிக்கு வந்தவுடன்,’ சார், எனக்கு வர வேண்டியது எப்படியும் வந்துடும் சார். ஒரு சவாரி நூறு ரூபா கொடுக்கணும், பணம் இல்லை, கையிருப்பு எண்பது ரூபா தான். இருக்கறதக் கொடுத்துட்டு பின்னாடி சில நாள் கழிச்சு மனசு கேக்கல தம்பி ஒன்னோட பாங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுன்னு கேட்டு கூட நூறு ரூபா அனுப்பி வெச்சார். எனக்கு என்ன தரணும்னு நரஸிம்மருக்குத் தெரியும் சார்,’ என்ற அந்த வேதாந்தி பாரதத்தின் ஆன்மா என்றால் தவறில்லை என்று நினைத்தேன்.
அருகில் எச்.டி.எப்.சி. ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து வந்த் போது, ‘அது போகட்டும் சார். உங்க நம்பரக் கொடுங்க. என்னோட ‘நரஸிம்மர் வாட்ஸப்’ குரூப்ல சேர்த்துக்கறேன். வாரா வாரம் என்ன அலங்காரம்னு என்னோட பேசஞ்சர்ஸ் எல்லாருக்கும் அனுப்பிக்கிட்டிருக்கேன்,’ என்று கூக்ளி போட்டு வீழ்த்தினார்.
சரி தம்பி. நரஸிம்மருக்கு சாப்பிடறதுக்கு என்ன கொடுப்பீங்க?’ என்றேன்.
‘நைவேத்யமா ஸார்? பானகம் தான். தினமும் பானகம் உண்டு,’ என்றவரிடம் மேலும் கேட்க ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பரிபூரணமான பிரேமையுடன், அசைக்கமுடியாத பக்தியுடன் நரஸிம்மரின் சேவையே தனது வாழ்வின் பயன் என்று வாழ்ந்துவரும் கார்த்திக்கை விட சிறந்த ஸ்ரீவைஷ்ணவன் உண்டோ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது,
‘ இன்னொரு விஷயம் சார். இன்னிக்கிக் காலைல ஒரே சவாரில என்னோட டெய்லி டார்கெட் முடிஞ்சுது. வீட்டுக்குப் போகலாம்னு ‘Go Home’ அழுத்திக்கிட்டே இருக்கேன். பதில் வரலை. மீண்டும் அழுத்தினேன். வரலை. சரி, நரஸிம்மன் நமக்கு வேற வேலை வெச்சிருக்கான் போல’ ந்னு பத்து நிமிஷம் செல்போன நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப உங்க கால் புக் ஆச்சு. பெருமாள் தன் அடியார்களைத்தான் தன் கிட்ட அனுமதிப்பார் சார்,’ என்ற கார்த்திக்கின் உருவில் பார்த்தசாரதி அமர்ந்திருந்தார்.
‘அஹோபிலம் போயிருக்கீங்களா?’ என்றேன்.
‘அவசியம் போகணும் சார். ஆனா, நாம முயற்சி பண்ணா நடக்காது. அவனுக்குத் தெரியும். எப்ப வரச் சொல்றானோ போகணும். கூடிய சீக்கிரம் வரச் சொல்வான்னு நினைக்கறேன்,’ என்றார்.
இறங்குமிடம் வர, மனமில்லாமல் இறங்கி விடைபெற்ற பின் கார் நகர்ந்தது. நரஸிம்மரும் அவரது ஆத்மார்த்தமான பக்தரும் சிறிய ஆட்டத்துடன் நகர்ந்தனர்.
‘ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா வென்று வாடிடும் இவ்வாணுதளே’
பி.கு.: கத்தாருக்குச் சென்று வந்தவர் கல்லாலான நரஸிம்மர். தற்போது முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமிக் கோவிலில் இருக்கிறார்.







Pandiya Nadu - Divya Desa yatra - Details including temple phone contact

With Achariyars, Madurai Meenakshi Amman & Lakshmi Nrusimhars grace, we had good dharishanam in and around temples near madurai.


Day 1 
Thirumal irunjollai KalAzagar - divyadesam, Palamudircholai murugar,  Vandiyoor maari amman temple, thirumogur Kalamega Perumal - divyadesam, Yanai Malai Narasimhar 

Day 2 
Thiruvathavoor, Thirukoshtiyur sowmiya narayana perumal - divyadesam, pillayarpatti karpaga vinayagar temple, ilayathakudi periyava adishtanam (65th Kanchi Shankarachariyar), ilayathakudi Nithyakalyani kailasanathar temple, thirumeyyam sathyagiri natha perumal - divyadesam, thiruthalinaathar temple- paadal petra stalam.

Day 3 
Madurai Meenakshi Amman abishega darisanam, koodal alagar divyadesam, thiruparankunram, immayili nanmai tharuvaar temple



Some photos








Jun 4, 2018

Vrundavan Narasimhar




Following taken from 
for all baktas to enjoy reading about Vrundavan Nrusimhar...


Narasimha Caturdasi in Vrindavan
Here is the darsan of Vraj Narasimha, a wooden deity of the Lord in a small temple situated in a galie leading to Radha Vallabha Mandir. This is where I celebrated my Narasimha Caturdasi this year. Mood was great and devotees enthusiactically qued to receive maha-prasad and caranamrta.




I also visited Radha Raman Mandir because in the evening the Goswamis were performing an abhiseka of this Narasimha Sila, which was originally worsipped by Gopal Bhatta Goswami.


Local boys dressed as Lorn Narshimhadev performed dance through the streets of Vrindavan and visited many temples to perform for the deities as well. Just after the abhiseka, they entered the Radha Raman Mandir.




The abhiseka.

[100_9712.JPG]


Radha Ramanji's darsan on that day.


Jun 1, 2018

thotakastakam with meaning






தோடகாஷ்டகம்

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக  மே சரணம் || 1 ||
  
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்   || 2 ||

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 3 ||

பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 4 ||

சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 5 ||

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 6 ||

குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 7 ||

விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 8 ||



Thotakastakam with meaning

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக  மே சரணம் || 1 ||

O knower of the nectar-ocean of the scriptures, the expounder of the
knowledge of the great upanishadic treasure! I meditate on Your pure lotus
feet in my heart . O Preceptor Shankara, be my refuge.

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்   || 2 ||

Save me whose heart is afflicted by the misery of the ocean of births,
O (You who are) the ocean of compassion! (By Your grace) make me the
knower of the truths of all the systems of philosophy . O Preceptor Shankara,
be my refuge.

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 3 ||

The people have found happiness due to You, who have the intellect adept in
the inquiry into Self-knowledge . Make me understand the knowledge of God
and the soul . O Preceptor Shankara, be my refuge.

பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 4 ||

You are Lord Shiva Himself . Knowing this my mind is filled with an
abundance of joy . Put an end to my sea of delusion . O Preceptor Shankara,
be my refuge.

சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 5 ||

Only after numerous virtuous deeds have been performed in many
ways, does a keen desire for the experience of Brahman through You arise.
Protect (me who am) extremely helpless . O Preceptor Shankara, be my refuge.


ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 6 ||

For the sake of saving the world, (Your) great (disciples) wander assuming
various forms and guises . O Guru, You shine like the sun (among them).
O Preceptor Shankara, be my refuge.

குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 7 ||

O Best among the Gurus! The Lord whose flag bears the emblem of the bull! You have no equal among the wise . You who are affectionate to those
who seek refuge! The treasure of truth! O Preceptor Shankara, be my refuge.

விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 8 ||

I have neither understood even one branch of knowledge clearly, nor do I
possess any wealth, O Guru . Quickly bestow on me the compassion which is
natural to You . O Preceptor Shankara, be my refuge.

Source : http://valmikiramayanam.in/?p=3753



Ahobila Narasimhar - Sri Barghava Narasimhar










சந்தியா காலத்தில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

குறையொன்றுமில்லை

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்


சஹஸ்ரநாமத்தைக் கூட சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும் என்று ஆசாரம். பிராதஹ் காலத்திலும் சொல்லலாம். மத்தியானத்திலும் சொல்லலாம். ஆனால் சாயங்காலம் தான் விசேஷம். ஏனென்றால் சாயங்கால வேளை தான் மனிதனைக் கெடுக்கக் கூடிய வேளை.

சந்தியா காலத்தை நாம் ரொம்ப ஜாக்கிரதையாக உபயோகப்படுத்த வேண்டும். கொஞ்சம் கோணல் வழியில் திருப்பி விட்டோமானால் அதல பாதாளத்தில் கொண்டு போய்த் தள்ளிவிடும். அப்படிப் போகாமலிருக்க வேறு இடத்தில் மனத்தை வைக்காமலிருக்க சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்வது நல்லது. அப்போது ஓர் அரைமணி நேரம் உட்கார்ந்திருக்க வேண்டுமில்லையா? ஆகையினால் அந்த நேரத்தில் மனம் வேறான வழிக்குப் போகாது.

நாலு பசுக்கள் மேயப் போகின்றன. ஒரு பசு மட்டும் திருட்டுப் பசு. அது புல்லையே மேயாது. பயிரைத்தான் மேயும். போய்க் கொண்டேயிருக்கிற பசு, வயலில் இறங்கி கதிர் விட்டிருக்கிற பயிர்களையெல்லாம் மேயும்! அந்த விவசாயி அதைப் போடு அடிப்பான். அந்த உதையைப் பட்டுக் கொண்டு மறுபடியும் வரும் அது!

அந்தப் பசுவை உடையவனுக்கு ரொம்ப வருத்தம். ‘இப்படி நித்யம் அடிபடுகிறதே. என்ன பண்ணுவது? என்று பார்த்தான். அதன் கழுத்திலே ஒரு கயிற்றைக் கட்டி, அதில் ஒரு கட்டையைக் கட்டித் தொங்கவிட்டான். பெரிய மரக்கட்டை!

கட்டையைக் கட்டிவிட்டவுடனே அந்தப் பசு வேகமாகப் போனபோதெல்லாம் இந்த முட்டிக்கும் அந்த முட்டிக்கும் இடித்தது. ஒரேடியாக வலி. அதிலிருந்து அந்தப் பசு பயிரை மேயாமல் மற்ற பசுக்களோடயே இருந்தது.

சாயங்காலம் என்கிற பொழுது நம்மை வேறான பாதையிலே இழுத்துச் செல்லாமலிருக்க சஹஸ்ரநாமம் என்கிற தடி கட்டப் பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் நாம் வேறு விஷயத்தில் ஈடுபடுவோமில்லையா?

இந்த்ரியங்களாகிற திருட்டுப் பசு கோணல் வழியிலே போகாமலிருக்க எல்லோரும் ஒரே விஷயத்தை நினைக்கும் படி செய்ய ஏற்பட்டது தான் இந்த சஹஸ்ரநாமம்.

அந்த மாதிரி பகவான் நாமாவைச் சொல்லி, சாயங்கால வேளையிலே நம் மனது பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரு முகப்படுத்தி, அவன் திருவடியிலே செலுத்தி விட்டோமானால், அந்த சாயங்கால வேளையை நாம் ஜெயித்து விடலாம். எல்லா காலத்தையும் ஜெயித்து விடலாம். அதனால் தான் சாயங்காலத்தில் தனியாக உட்கார்ந்து சஹஸ்ரநாமத்தைச் சொல் என்றது. இல்லையானால் பல மஹான்களை வைத்துக் கொண்டு பாராயணம் பண்ணு என்றது. அதுவும் இல்லையானால் ஒவ்வொரு கிருஹத்தில் ஒவ்வொரு நாள் பாராயணம் பண்ணு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

பல இடங்களில் பல நகரங்களில் இப்படி நடக்கிறது.
ஆகையினால் சஹஸ்ரநாமம் சகல க்ஷேமத்தையும் உண்டு பண்ணக் கூடியது. புத்துயிர் ஊட்டுவது. மரணப் படுக்கையிலே இருப்பவரை பிராண வியோகத்திலிருந்து மீட்கக் கூடியது. அப்படியே அவருக்குப் பிராண வியோகம் விதிக்கப்பட்டிருந்ததானால், அதைக் கேட்டுக் கொண்டே உயிர்நீப்பவர் பரமபதத்தை அடையச் செய்யக் கூடியது.

ஆகையினால் எம்பெருமானின் திருநாமம் ஒவ்வொன்றும் உயர்ந்ததாகிறது.