ஸ்ரீ முக்கூர்
லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்:-
வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. 'உத்ரிதாமிவராஹேணா' என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.
யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி,
''உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்கிறார்.
அதற்கு பூமாதா சொல்கிறாள்.
ஸ்ரீப்ருத்யுவாச -
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ
''உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?'' என்று பூமாதா கேட்கிறாள்; 'ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு' என்கிறாள்.
ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம்
என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.
'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்' என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.
'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்' என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.
'கல்பாதௌ
ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்' என்று
அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப்
பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள்.
அப்போது பகவான் 3 விஷயங்கள்
சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை
ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
ப்ரபதன சுலபன் அவன் - ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது
திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது.
இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!
ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்' என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். 'அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்' என்கிறார் பரமாத்மா.
பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது.
No comments:
Post a Comment