ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர் - தான் சிந்தலவாடி யின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.
ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோயிலில் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்தார். பின்னாளில் இங்கு யாத்திரை வந்த ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ யோக நரசிம்மரை பூஜித்தார்.
ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோயிலில் நடத்துகிறார்கள்" என்று தெரிவிக்கிறார் கோயில் நிர்வாகி கே.பார்த்தசாரதி. மத்வ சம்பிரதாயப் படி தினசரி பூஜைகளும் உற்சவங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.
செல்லும் வழி
திருச்சி - குளித்தலை சாலையில் 45வது கி.மீ., குளித்தலையில் இருந்து 12 கி.மீ.
தொடர்புக்கு: 0 98409 21022 / 0 98453 48009
http://www.chintalavadiyoganarasimha.com
http://hinduspritualarticles.blogspot.sg/2015/01/blog-post_11.html
No comments:
Post a Comment