Very nice philosophical talk by D.A.Joseph http://www.youtube.com/watch?v=hjVH1KXbTuI
on Thiruvai mozi.
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
திருவாய் மொழி முதல் பத்து
Courtesy - http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruvaaimozhi_1.html
Mukkur Swamigal thirupathangale thunai
Srimathe Ramanujaya namaha
Sri Lakshmi Narasimhaya namaha
on Thiruvai mozi.
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
திருவாய் மொழி முதல் பத்து
2791 | உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. |
1.1
|
2792 | மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன் இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும் இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. | 1.2 |
2793 | இலனது வுடையனி தெனநினை வரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந் நலனுடை யொருவனை நணுகினம் நாமே. | 1.3 |
2794 | நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள் தாமவரிவருவர், அதுவிது வுதுவெது வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. | 1.4 |
2795 | அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள் அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர் அவரவர் விதிவழி யடையநின் றனரே. | 1.5 |
2796 | நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர் என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. | 1.6 |
2797 | திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. | 1.7 |
2798 | சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. | 1.8 |
2799 | உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள் உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள் உளனென விலனென விவைகுண முடைமையில் உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. | 1.9 |
2800 | பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன் பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. | 1.10 |
2801 | கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல் நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. | 1.11 |
Courtesy - http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruvaaimozhi_1.html
Mukkur Swamigal thirupathangale thunai
Srimathe Ramanujaya namaha
Sri Lakshmi Narasimhaya namaha
No comments:
Post a Comment