Search This Blog

Aug 21, 2012

ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம் Meaning/Mp3/Video/Text



ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம்
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அருளியது 


ஸ்ரீ மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில் நித்ய வாசம் பண்ணிக்கொண்டு இருப்பவனும், தேனிலும் இனிய பிரானும், ஆநந்தமாய் விளங்குபவனும், பெரிய வேள்வியாய் விளங்குபவனான ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் பொருட்டு மங்களம். 


ஸ்ரீ கிருஷ்ண வேணி நதிக்கரையில் விளங்குபவனும், எல்லாவிதமான  கோரிக்கைகளையும் பூர்த்தி செய்விப்பவனும், ஸ்ரீ பிரஹலாதனுக்கு  பிரியமான ரூபமுடையவனுமான ஸ்ரீ   ந்ருஸிம்ஹனுக்கு மங்களம்.

குஹையில் இருப்பவனும், பயமற்றவனும், கம்பீரமானவனும், மஹாத்மாவும், எல்லாவிதமானக்  கெடுதிகளையும் போக்குபவனாயும் விளங்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனின் பொருட்டு இம் மங்களம்.

நான்மறைகளின் வடிவாயும், மந்த்ரங்களில்  உறைபவனும், குறைவில்லா  ஞானமுடையவனாயும், அடிபணிபவருக்கு கற்பகத்தருவாய் விளங்குபவனுமான  ஸ்ரீ  ந்ருஸிம்ஹனுக்கு  மங்களம்.


குஹையில் நித்யவாஸம்  பண்ணுபவனும், மிகவும் ரஹஸ்ய பொருளானவனும் , பரம ரஹஸ்ய வித்யைகளின் ஸ்வரூபியும், குஹையில்  நன்கு  விஹாரம் (விளையாடுபவன்) செய்பவனாயும்  விளங்கும் ஸ்ரீ  ந்ருஸிம்ஹனின் பொருட்டு  மங்களம் உரித்தாகுக.

ஸ்ரீ வாடபல்லி, ஸ்ரீ வேதாத்ரி ஆகிய இரு ஷேத்ரங்களின் இடையில் இருப்பவனும், எல்லோருக்கும் சேமநிதியாய்   இருப்பவனும், மிகவும் (கரும்பைக் காட்டிலும்) இனிப்பவனும், எல்லோருக்கும் சுகமளிக்கும் தேவனான  ஸ்ரீ  ந்ருஸிம்ஹனுக்கு  மங்களம்.

ஸ்ரீ தாபநீய உபநிஷத்தின் ரஹஸ்யமாய் இருப்பவனும், தாபத் ரயங்களைப் போக்குபவனுமாயும், வணங்குபவர்களை ஆதரிக்கும் கற்பக வ்ருக்ஷம் போன்றவனுமான ஸ்ரீ  ந்ருஸிம்ஹனுக்கு  மங்களம்.

ஸ்ரீ ராஜலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருப்பவனும், ஆசை , பகை இவைகளை வேறோடு அழிப்பவனும், ஸ்ரீ மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில் மஹிமையுடன் விளங்குபவனான ஸ்ரீ  ந்ருஸிம்ஹனுக்கு  மங்களம்.

பலச்ருதி:

முக்கூர் லக்ஷ்மி ந்ருஸிம்ஹ தாஸனால் நன்கு சொல்லப்பட்ட அத்புதமான இந்த மங்களாஷ்டகத்தை யாரொருவர் ஊக்கத்துடனும், பக்தியுடனும் படிகின்றாரோ அவர் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார் . 


"சுபமஸ்து"


Video of Mattapalli Mangalashtakam - rendered by Sri Mukkur Lakshmi Narasimhachariyar Swamigal


Mattapalli Mangalashtakam in English:-

Mattapallinivasaya madhuranandarupine 
mahayajnasvarupaya srinirusimhaya mangalam

Glories to the sweet, blissful Lord of Mattapalli, Sri Lakshmi Narasimha, who is described in the Vedic Yagnas as the One who is attainable by the Madhu Vidya form of Bhakti Yoga. 

krisnavenitatathaya sarvabhistapradayine
prahladapriyarupaya srinisimhaya mangalam

Glories to the Lord, who resides on the bank of the river Krishna, the bestower of all auspiciousness, One who is dear to those who are as devoted as prahlada.

garrtasthitayadhiraya gambhiraya mahatmane
sarvarista vinasaya srinrsimhaya mangalam


Glories to the brave majestic Lord, the dispeller of all obstacles, who resides in a mountain cave.

rigyajussamarupaya mantrarudhayahimate
sritanam kalpavkrsaya srinrsimhaya mangalam

Glories to the Lord who is seen in the four Vedas, who is seen in the mantras, 
who showers the desired to those who surrender to Him.

guhasaraya guhyaya guhyavidyasvarupine
kuharante viharaya srinrsimhaya mangalam

Glories to the Lord, who can be experienced through esoteric Guhya Vidhya.

sripalayadrimadhasthaya nidhaya madhuraya ca
sukrapradaya devaya srinrsimhaya mangalam


Glories to Him, who confers happiness, who is the beautiful treasure of Mattapalli in between the two kshetras of Vadapalli and Vadadri.

tapaniyaaarahasaya tapaaatraya vinasine
natanam parijataya srinrsimhaya mangalam

Glories to the secret described by the Tapaniya Upanishad;
the Lord destroys the Tapa Trayas(3 form of troubles) of his devotees.

rajyalakshsmya sametaya ragadvesa vinasine
mattapalli nivasaya srinrsimhaya mangalam

Glories to the Lion of Mattapalli who is ever with Raajyalakshmi 
and removes the feelings of greed and hatred from his devotees.

mukkur nrsimhadasena proktam mangalashtakam
yah pathet sraddaya bhaktya sarvapapaih pramucayate

He who recites with sincere devotion, the sacred Mangalam verses,
composed by the Lord and recited through Mukku Narasimha Dasan gets all his sins destroyed.


Mattapalli Mangalashtakam Text in Tamil

Mattapalli Mangalashtakam MP3
http://www.prapatti.com/slokas/mp3/mattapallimangalaashtakam.mp3


நன்றி 
மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள். 
ஆசிரியர்: முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்.

லக்ஷ்மி நரசிம்ஹர் திருப்பாதங்களே  சரணம்.


குருவே சரணம்.
தாயே சரணம் மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்ஹா சரணம்.



No comments:

Post a Comment