சித்தர் இடைக்காடரிடம் ஒரு குடியானவர் கேட்டார்; “பெருமாள் தசாவதாரம் எடுத்தார்; நான் கூப்பிடும்போது எந்தப் பெருமாள் வருவார்?”
அதற்கு சித்தர் சொன்னார்: “ஏழை, இடையன், இளிச்சவாயன்”.
குடியானவர் கொஞ்சம் திகைத்துப் போனார். இதில் என்ன அர்த்தம் பொதிந்துள்ளது என்று சிந்தித்தவர் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டார்.
அப்போது அதன் அர்த்தம் புலப்பட்டது; ஏழையாக வாழ்ந்த ராமரும், இடையனாக வாழ்ந்த கண்ணனும், இளிச்ச வாயனான (வாயை இளித்து ஹிரண்யனைப் பிளந்த) நரசிம்மரும் வருவார்கள்.
இதனை உங்கள் அன்றாட வாழ்வுடன் பொருத்திப் பாருங்கள்.
நான் இப்படி பார்க்கிறேன்...ஏழை,இடையன்,இளிச்சவாயன் ..இந்த மூவருமே நரசிம்மன்தான்..
ReplyDelete1 )ஒருவருக்கு தாய்,தந்தையரே ஒரு செல்வம்தான்..ராமனுக்கும்,கிருஷ்ணருக்கும் பெற்றோர் உண்டு..நரசிம்மனுக்கு இல்லை..அதனால் அவன் ஏழை.
2 )இடையன் என்பது ஒரு ஜாதி.. முதல்,இடை,கடை என பார்த்தால் இடை என்பது " நடு" நடுவில் என ஒரு பொருள்..இரண்டு பிளவுபட்ட தூணுக்கு நடுவில் பிறந்தவன்...எனவே இடையன்..
3 ) பேழை போன்ற அகலமான வாயை உடையவன்..இளித்த வாயன் ...
எனவே ஏழை,இடையன்,இளித்தவாயன் ஆகிய மூவருமே அந்த நரசிம்மன்தான்...
Awesome Explanation..
ReplyDeleteRegards/Sathyabama
Thanks Sathyabama...coming 9th May is Sri Narsimha Jayanthi..
ReplyDeletePray to Narasimha..He will give whatever you want.