Sep 13, 2012

வேதாத்ரி யோகானந்த நரசிம்ஹன்


வேதாத்ரி நரசிம்ஹன்


Vedadri Yoganandha Narasimhar
வேதாத்ரியில் உள்ள எம்பெருமானுக்கு யோகானந்தன் என்று பெயர்.  கிருஷ்ணா நதி தீரத்திலே பெரிய சளக்கிராம மூர்த்தியாய் அவன் காட்சியளிக்கிறான். உள்ளுக்குளே அழகாக அமர்ந்திருக்கிறான். அவனது இடையிலே ஒரு கத்தி வைத்திருக்கிறான். நாம் இந்த யோகானந்த நரசிம்ஹனை ஸேவிக்கப்  போனோமானால் அந்த கத்தியை எடுத்து நம் கையிலே கொடுப்பார்கள். அதை வாங்கி பார்க்கலாம். பகவானே பெரிய வைத்தியன் என்கிறது வேதம். முதல் வைத்தியன் அவன். மருந்தாகவும் இருக்கிறான்; மருத்துவனாகவும் அவனே இருக்கிறான். இங்கே கத்தி வைத்துக் கொண்டிருக்கிற எம்பெருமான் பெரிய 'சர்ஜன்'; 'ஆபரேஷன்' பண்ணுவதிலே  திறமை மிக்கவன்.

வேதாத்ரிக்கு பக்கத்து ஊரிலே ஒருவருக்கு வயிற்றில் பெரிய கட்டி வந்துவிட்டது. ஆபரேஷன் பண்ணினால் அவர் பிராணனுக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்கள். எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் பல இடங்களில் போய்ப் பார்த்துவிட்டு  வந்துவிட்டார். வேதாத்ரி நரசிம்ஹனை  ஸேவித்து, அங்கே ஒரு மண்டலம் விரதம் இருந்தால் கட்டி தானே போய் விடும் என்றார்கள்.

அங்கே பக்கத்திலேயே இருந்த நரசிம்ஹனை மறந்துவிட்டு எங்கெல்லாமோ சுற்றினாரே ...! 48 நாள் அங்கே தங்கி பிரதக்ஷிணம் பண்ணினார். நாற்பத்தெட்டாம் நாள்  ராத்திரி, அவர் வயிற்றைத் தடவுகிற மாதிரி இருந்ததாம்; மறுநாள்  பார்த்தால் அந்த கட்டியையே காணோம். சொஸ்தமாகி அழகாகத் திரும்பி வந்துவிட்டார். 

ஆரோக்கியத்தை கொடுக்கும்படியான எம்பெருமான் அங்கே வேதாத்ரியிலே எழுந்தருளியிருக்கிறான். இப்போதும் எத்தனையோ பேர் அங்கே வேண்டிக்கொண்டு பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
-- 
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் 
"குறையொன்றுமில்லை" என்னும் நூலிலிருந்து.


Mukkur Swamigal Thirupathangale saranam.
Thaye Saranam
Lakshmi Narasimha Saranam

2 comments:

  1. It is really refreshing to read this KOI part of Sri SS on the divine doctor.

    Keep up your good work

    ReplyDelete