Search This Blog

Oct 30, 2018

மன அமைதி


இரவில் சிறிய பிரச்சனை கூட பெரிதாக தெரியும் ... அதனால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பலர்.

தூக்கம் வராமல் குழம்பி தவிக்கும் இரவுகளில் நான் இதை திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லுவேன் ...
சில நிமிடங்களில் மனம் அமைதி ஆகும் ...

முழுவதுமாக இதை சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை... சில வரிகள் போதும் ...


கீதாசாரம் 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்


இது இல்லாவிட்டால் ...
"நான் உடம்பு அல்ல ... நான் ஆத்மா ...எத்தனையோ பிறவிகளில் இதுவும் ஒன்று ... " 



இல்லாவிட்டால் பெருமாள் திருவடியை மனதில் நினைத்து .. அவன் கட்டை விரலில் ஒட்டிக்கொண்டு நான் உறங்குவதாக நினைத்து கொள்ளுவேன் ...


அதுவும் இல்லாவிட்டால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆரம்பிப்பேன் மனதிற்குள்  .. சொல்லி முடிக்க வேண்டும் என்பது இல்லை - ஆயிரம் நாமக்களில் இருந்து ஆரம்பித்தால் போதும்... தானாக தூக்கம் வரும் ...

முயற்சித்து பாருங்கள்.

சர்வே ஜனா சுகினோ பவந்து.









4 comments:

  1. Excellent. No words.ur writing are beautiful

    ReplyDelete
  2. Dear Murpriya

    You recalled my late father after reading your post. He used to teach me chant sahasranama. He had also advised me to chant whenever we do not get sleep. A simple 10 to 15 namaas is enough for him to sleep.

    Thank you for recalling appa today.


    KS

    ReplyDelete
    Replies
    1. Thank you... these are some methods adiyen tried and tested... helped some of the tough nights...

      Delete