Search This Blog

Mar 15, 2017

இளிச்ச வாய் பெருமாள்

சித்தர் இடைக்காடரிடம் ஒரு குடியானவர் கேட்டார்; “பெருமாள் தசாவதாரம் எடுத்தார்; நான் கூப்பிடும்போது எந்தப் பெருமாள் வருவார்?”

அதற்கு சித்தர் சொன்னார்: “ஏழை, இடையன், இளிச்சவாயன்”.

குடியானவர் கொஞ்சம் திகைத்துப் போனார். இதில் என்ன அர்த்தம் பொதிந்துள்ளது என்று சிந்தித்தவர் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டார்.

அப்போது அதன் அர்த்தம் புலப்பட்டது; ஏழையாக வாழ்ந்த ராமரும், இடையனாக வாழ்ந்த கண்ணனும், இளிச்ச வாயனான (வாயை இளித்து ஹிரண்யனைப் பிளந்த) நரசிம்மரும் வருவார்கள்.

இதனை உங்கள் அன்றாட வாழ்வுடன் பொருத்திப் பாருங்கள்.




3 comments:

  1. நான் இப்படி பார்க்கிறேன்...ஏழை,இடையன்,இளிச்சவாயன் ..இந்த மூவருமே நரசிம்மன்தான்..
    1 )ஒருவருக்கு தாய்,தந்தையரே ஒரு செல்வம்தான்..ராமனுக்கும்,கிருஷ்ணருக்கும் பெற்றோர் உண்டு..நரசிம்மனுக்கு இல்லை..அதனால் அவன் ஏழை.
    2 )இடையன் என்பது ஒரு ஜாதி.. முதல்,இடை,கடை என பார்த்தால் இடை என்பது " நடு" நடுவில் என ஒரு பொருள்..இரண்டு பிளவுபட்ட தூணுக்கு நடுவில் பிறந்தவன்...எனவே இடையன்..
    3 ) பேழை போன்ற அகலமான வாயை உடையவன்..இளித்த வாயன் ...

    எனவே ஏழை,இடையன்,இளித்தவாயன் ஆகிய மூவருமே அந்த நரசிம்மன்தான்...

    ReplyDelete
  2. Awesome Explanation..

    Regards/Sathyabama

    ReplyDelete
  3. Thanks Sathyabama...coming 9th May is Sri Narsimha Jayanthi..
    Pray to Narasimha..He will give whatever you want.

    ReplyDelete