Search This Blog

Jan 7, 2016

Thiruppavai in picture form

Please do not miss this album,
The artist Sri Keshav Venkataragavan's paintings depicts each pasuram of Thirupavai.https://www.facebook.com/keshav.keshav/media_set?set=a.10205199806249982.1073741866.1090470507&type=3

திருப்பாவை
Seeking the Guru's grace


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (474)
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். (475)

வையத்து வாழ்வீர்காள்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். (476)
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி


ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.(477)

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.(478)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.(479)
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.(480)


கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.(481)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.(482)
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.(483)
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.(484)
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.(485)
கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.(486)
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.(487)
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.(488)

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ


நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.(489)
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடையஅம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.(490)
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
-- some comments about this
check to see அம்பரமே...தானம் செய்யும் நந்தகோபன் யசோதை. ..ஓங்கி உலகளந்த கண்ணன். ...பலராமன். ...
கண்ணன் முகம் கொடியில்? -- Ambaram, thanneer, soru maRRum anaithukkum AdhAramAga iruppavan.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.(491)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
-- some comments about above paining
Prakruti in one hand, purushan in the other... And emperumanar of the bhavam with athuzhaai... 
Details of the pasuram like உந்து மதக்களிற்றன்...
யானையோடு மோதும் நந்தகோபன். ..கொக்கரிக்கும் கோழி...மல்லிகைப்பந்தலில் கூவும் குயில்கள்...கைவிரல் பந்து....ராமானுஜர். ...குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.(492)

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
comments
குத்து விளக்கெரிய. .....விளக்கு, தந்தக் கால்களையுடைய கட்டில...மலர் சூடிய மங்கை மடியில் பெருமாள். ....ராவணனும் பத்து தலைகளும் Super! ....ராமன் பக்கத்தில் சூர்ப்பனகை என்று தோன்றுகிறது....அசோகவனத்து சீதை ..முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.(493)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
some comments from facebook
அடியார்களுக்கு துன்பம் வருவதற்கு முன்னமேஅவர்கள் நினைத்த இடத்திற்குச் சென்று, அவர்களுடைய நடுக்கத்தைப் போக்கும் மிடுக்குள்ள கண்ணன் (நாராயணன்) கஜேந்திரமோக்ஷம், நோன்புக்கு வேண்டிய ஊக்கமும் , தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) கையில் வைத்திருக்கும் அழகிய நப்பின்னைப்பிராட்டி அழகோ அழகு. எல்லாவற்றிக்கும் மேல் ஆண்டாளின் சேவிக்கும் பாங்கு கண் கொள்ளக் காட்சி. (ஆண்டாளின் கொண்டையும், அதிலுள்ள மணியும் தத்ரூபம்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.(494)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான  பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். (495)
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான  பங்கமாய் 
விரிந்தும் விரியாத தாமரைப் போன்ற கண்கள் அழகு....நிலா சூரியன். ...காளிய நர்த்தனம். .. Beautiful picture. Somebody losing the crown...fighting...what's the story behind that Pls?
Keshav Venkataraghavan The kings around the world are deluded by their power and possessions. When they lose everything, they have no other refuge except Krishna.
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.(496)
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.(497)

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
comments from facebook
ஆறு போற்றிகளுக்கும் ஆறு ஓவியங்களும் அருமைஜி.

உலகளந்தவன் .. ராமன் ஆதிசேஷனையே பாலமாக வைத்து இலங்காசுரனை அடைகின்றானோ....சகடம் உதைத்து. ...கன்றான அசுரனை தூக்கி எறிந்து. ..கோவர்த்தன மலை ஏந்தி.... Superb!!!!! 
விளாமரமும் கனியும் missing?...or am I missing it?


Keshav Venkataraghavan Right side below. Krishna holds the vatsasura and rotating it. (Before smashing it on the tree.)
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்(498)
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
comments from facebook
 உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபன்
At the back Kuvalayapeedham. Kansa. Fear !மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.(499)
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.(500)

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா 
after "SAroopya" it is " Saayujya", piraatti arooDam on the tail portion of cow and donating "janardhana" ( one who torments jani of all atmaas) with double sakkare pongal whammy to the "anjukkuDi santati".

 தோடு ,தோளில் ஆபரணம், கால் கொலுசு, சூடிய ஆண்டாள்....அனைத்தும் பசுவின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் லஷ்மி தேவியின் கடாட்சமோ.....நெய் வழியும் சர்க்கரை பொங்கல் கிருஷ்ணன் கொடுக்கின்றாரோ?....கூடாரை....துரியோதன வதம்.... Super!

நாடுபுகழும் சம்மானம் என்பதற்கு ஆண்டாளை சர்வ அலங்காரபூஷியாக வரைந்து அவள் கோவிந்தனிடம் பெறும் பறையையும் வரைந்து என்னவென்று சொல்வது உங்களின் உட்கிரகிப்பையும் அதனை தூரிகையில் கொண்டு வந்த விதத்தையும் ?
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.(501)


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
குறையொன்றுமில்லாத கோவிந்தன்! தினமும் பறந்து கொண்டேயிருக்கும் கிளி இன்று அழகாக சரணாகதி செய்வது கொள்ளை அழகு. கறவை பசு, ஆண்டாள் கையில் தயிர் சாதம், மாடு மேய்க்கும் கண்ணன். 

 பக்தனுக்காக பகவானே வளைகிறான். 

ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் பசு பால் பொழிவதுபோலிருக்கும் சித்திரத்தின் தாத்பர்யம் என்ன?
Govinda Pattabhishekam : Srimadbhagavatham - Kamadhenu Govinda enra pattam soottuvadu. After the Goverdhan episode.

Adiyens favorite kutti killi is paying obeisance...but to whom, it appears to... Andal. Bhaagavatha seshatvam is the charama parva of our darsana. We all are represented by the kutti killi, Andal is our Acharya(Acharyini?)who bows to ThiruVenkatamudian for all of us. Or another view: Andal appears to be bowing to the kutti killi, like Thirumangaimannan did to the parrot to whom he taught Bhagavathnama in that paasuram that predicts Swami Desikan's avatara. Love the maadu(also madhu perhaps) meikara Kannan. He goes behind Andal for thayirsadham. Kannan wants to possess all things touched by His favorite bhakthas. Superb depiction swamy, as usual. Adiyen is running out of superlatives....Dasan

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.(502)

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்து
it is Andal -7 andals. Ettraikkum ezhezh piravikkum. Not to be taken literally. Used to show different kainkaryams.

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.(503)
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை

I really like bhagawan continuing the samudra mathanam even when piraati is coming to garland him. Ramaam mukundam nirapeksham eepsitam. He did not show any reaction of expectation towards lakshmi reads bhagavatham. 
Krishna vs. Vishnu... Samudra mathanam he got lakshmi, by curd churning he got radha
Keshav Venkataraghavan Yes. He was indifferent. gitapress.org  Thiruppavai


1 comment: