Search This Blog

Mar 17, 2012

மட்டபல்லி லக்ஷ்மி நரஸிம்மர்


பக்தனுக்கு தரிசனம் அளித்த மட்டபல்லி நரஸிம்மர்


ட்டபல்லி பகுதியில் காடுவாழ் மக்கள் அதிகம். அப்படி ஒரு காட்டு ஜாதியைச் சேர்ந்தவன், நிறைய அரிசி, பருப்பு, காய், பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மட்டபல்லிக்கு வந்திருக்கிறான். (அப்படி அவன் நடந்து வந்த ஒற்றையடிப்பாதை மட்டபல்லியில் இன்னமும் இருக்கிறது.)
அவன் வந்து சேரும் நேரத்தில் கோயிலைப் பூட்டி விட்டு அர்ச்சகர்களெல்லாம் கிளம்பி போய் விட்டார்கள். வெளியில் கோயில் அருகில் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் வந்து உட்கார்ந்தான் அவன். இனிமேல் காலை விடியும் நேரத்தில்தான் பகவானை சேவிக்க முடியும்.
mattappalli1அதிலும் நமக்கு முதலில் சேவை கிடைக்காது. விச்வருபாதிகளெல்லாம் ஆகி, அபிஷேகம் ஆன பிறகுதான் பகவானை சேவிக்கலாம். இப்படி நினைத்து ஏங்கி உருகினான் அவன். சுவாமி உன்னுடைய தரிசனத்துக்கு வந்திருக்கிறேனே, மகா பாவியான எனக்கு அது கிடைக்குமா? நீ அனுக்கிரஹம் செய்யாவிட்டால் வேறு எங்கேயிருந்து அது எனக்குக் கிடைக்கும்? இப்படி காலாதீதமாக வந்திருக்கிறேனே. உன் தரிசனம் எனக்கு கிடைக்குமா? எப்போது கிடைக்குமோ? தெரியவில்லையே…
அந்த நேரத்தில் திடீரென்று ஒரு அர்ச்சகர் வந்து விட்டார். தோளில் சாவியை சாற்றிக் கொண்டு இருந்தார். அவனைப்பார்த்து வாப்பா உள்ளே போகலாம் உனக்கு சேவை பண்ணி வைக்கிறேன் என்று கூப்பிடுகிறார். அவனும் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு உள்ளே போகிறான்.
கதவைத் திறந்த அர்ச்சகர், அரிசி, பருப்பு எல்லாவற்றையும் எம்பெருமான், அந்த மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்மனின் திருவடியில் அப்படியே சேர்ப்பித்தார். ஆனந்தமாக நிதானமாக அர்ச்சனை பண்ணினார். விசேஷமாக கற்பூரவாரத்தியெல்லாம் பண்ணி அவனுக்கு விசேஷமாக அனுக்-கிரஹம் பண்ணினார்.
எல்லாம் முடிந்ததும் அவனைப் பார்த்து திருப்தி ஏற்பட்டதா? என்றும் கேட்டார்.
ரொம்ப திருப்தி என்றான் அந்த கிழவன். அவனை அழைத்துப் போய் மறுபடியும் மண்டபத்திலே இருக்க வைத்து, நீ இப்போது எங்கேயும் போகாதே. இந்த இருட்டிலே கிளம்பினால் ஊர் போய் சேருவது கஷ்டம். இங்கேயே படுத்துக்கொள். காலையில் எழுந்து போகலாம் என்று சொல்லி விட்டு அர்ச்சகர் புறப்பட்டுப் போய்விட்டார்.
கிழவனுக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வளவு கருணையோடு வந்து இந்த அகாலத்திலே நமக்கு சேவை பண்ணி வைத்தாரே! என்று வியந்து அந்த ஆனந்த அனுபவத்திலேயே அப்படியே படுத்துத் தூங்கி போய் விட்டான்.
மறுநாள் காலை ஆறு மணி….அர்ச்சகர் வருகிறார். “இங்கே எதற்கு படுத்திருக்கிறாய் நீ….?” என்று அதட்டுகிறார்.
கிழவன் நடுங்கிப்போய்ப் பார்க்கிறான்…. “போ, போய் ஸ்நானம் பண்ணிவிட்டு அப்புறம் வா…” விரட்டினார் அர்ச்சகர்.
விரட்டிவிட்டு உள்ளே போனவர் விக்கித்துப் போனார்! அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த பெருமாளின் முன்னால் அரிசியாகக் கொட்டிக் கிடக்கிறது, ஒரு பக்கம் பழமாக அடுக்கியிருக்கிறது….இன்னொரு பக்கம் பருப்புக் குவியல்!
“இதெல்லாம் எப்படி….? யாரு…..?”
அர்ச்சகர் மனத்தில் கேள்வி எழுந்த போதே கண் முன் ஒரு தோற்றமும் எழுந்தது. அந்தத் தோற்றம்….வெளியே மண்டபத்திலே பார்த்து, தாம் மிரட்டிய முதியவரின் தோற்றம் என்பதை உணர்ந்தார். பெருமான் முன்னிலையிலேயே தெரிந்தான் கிழவன்!
mattappalli2அந்தக் காட்சியைக் கண்டதும் நடு-நடுங்கிப் போனார் அர்ச்சகர்.
கோவிலை விட்டு வெளியே ஓடினார். கிழவன் கிருஷ்ணா நதியிலே இறங்கி ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஓடிப்போய் அவன் கால்களில் விழுகிறார்.
“அப்பா! நான் நித்யம் பூஜை பண்-ணுகிறேன். அந்த மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்மனைத் தொட்டு நித்ய பூஜை பண்ணும் எனக்கு ஒரு நாளும் தரி-சனம் கொடுக்கவில்லை…. ஆனால், உனக்–காக அவன் வந்து, தனக்கு வேண்டியவற்றை யெல்லாம்  தானே கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான். தானே அர்ச்சனை பண்ணி தன்னுடைய திருவடியிலே உன்னைச் சேர்த்துக் கொண்டானே….” என்று உருகினார்.
அந்த பகவானுடைய காருண்யத்தை நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். சாமான்யன் என்பதால் பகவான் யாரையும் ஒதுக்குவதில்லை. உயர்ந்-தவன் என்பதாலே, பக்தியில்லாத ஒரு-வனை அவன் ஏற்றுக் கொள்வானா……? எல்லோரிடத்திலும் விசேஷமான அன்பு கொண்டவன் எம்பெருமான். பிரத்யக்ஷமாக அதை மட்டபல்லி க்ஷேத்ரத்தில் நமக்குக் காட்டியிருக்கிறான்.
- முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்
குறையொன்றுமில்லை என்னும் நூலிலிருந்து.

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் குறையொன்றுமில்லை என்னும் நூலிலிருந்து.


முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் 
"குறையொன்றுமில்லை" என்னும் நூலிலிருந்து.


காருண்யம் 
பகவானிடதிலே நாம் எல்லாவற்றையும் கொடுத்தாலும், ஒரு எழும்மிச்சம்பழத்தைக் கொடுத்துவிட்டு ராஜ பதவியை கேட்கிற மாதிரிதான்.
நாம் எது பண்ணினாலும் அவனுடைய காருண்யத்துக்கு முன்பு அது விலை செல்லாது.


வேதம் 
வேத கோஷம் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. பாராயணம் முடியும் வரை உட்கார்ந்து கேட்க்கும் எண்ணம் யாருக்கு வருகிறதோ, அவரை பகவான் நிச்சியம் பார்ப்பான்.

தாயார் 
பொறுமையே உருவானவள் பூமி பிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு செய்தாலும் அதை பகவானிடத்தில் சொல்லமாட்டாள். நாம் ஒரு துளி நல்லது செய்தல் கூடஅதை பெரிதுபடுத்தி அவனிடத்திலே சொல்லுவாள். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு.

அதிதி தேவோ பவ
கிரஹத்துக்கு வரக்கூடிய அதிதிகளிடத்திலே எம்பெருமான் இருக்கிறான்.  அதனால் தான் எம்பெருமானை வேதம் சொல்கிறபோது 'மாத்ரு தேவோ பவ ! பித்ரு தேவோ பவ ! ஆச்சார்ய தேவோ பவ ! அதிதி தேவோ பவ ! என்கிறது.  அதிதியை தெய்வமாக நினைக்க வேண்டும்.  ஏனென்றால் பகவானே நமக்கு இவன் அன்னமிடுகிறானா என்று அதிதியாய் பார்க்க வருவான்.  ஆகையினாலே, அதிதிகளாய் வரக்கூடியவர்களை உடனே வரவேற்று உபசரிக்க வேண்டும்.


அன்னமயகோசம் 
அன்னத்தைக் குறைதால்தான் அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படும். வேதமானது அன்ன சூக்ததிலேயே சொல்கிறது. "எவன் என்னை நிறைய சாபிடுகிறானோ அவனை நன் சாப்பிடுகிறேன்" என்று அன்னமே சொல்கிறது.

"யோ புங்தே அஹமேவ புங்தே"

ஆகையால் அன்னத்தை நிறைய சாபிட்டால் தான் பலம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அன்னத்தை குறைத்து அனுபவித்தால், அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படுகிறது. வியாதி எல்லாம் நீங்குகிறது.




Mar 16, 2012

KANAKADHARA STOTRAM (MP3 / Meaning / Video )

Kanchi Perundevi Thayar




கனகதாரா ஸ்தோத்ரம் 

1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||

மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு - அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது - எனக்கு மங்களம் தருவதாகுக !

2. முக்தா முஹ§:விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||

மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.

3. விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்
ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|
ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||

எல்லா தேவர்களுக்கும் தலைமையான - இந்த பதவியை - கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!

4. ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||
ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்
பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||

சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து - (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.

5. பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||

மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்.

6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|
மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:
பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||

கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

7. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|
மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா:||

பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவினிடத்தில் இடம் பெற்றான்.

8. தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||

ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை சாதகக்குஞ்சின் மேல் பொழியட்டும்.

9. இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர -
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே|
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்
புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||

சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை - என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.

10. கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|
சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||

மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.

11. ஸ்ரீ§த்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨த்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||

நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்றறியப்படுபவளுக்கும், இணிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

12. நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை||

தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

13. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி
ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா
த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே||

ஹே!தாமரைபோல் கண்களை உடையவளே!செல்வம் கொழிப்பனவும், கரணங்களனைத்தையும் மகிழ்விப்பனவும் சக்ரவர்த்தி பதவியை நல்குவனவும், பாபங்களைப் போக்குபவனவுமான உன்னை வணங்கல்கள் என்னையே சாரட்டும்.

14. யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:|
ஸந்தநோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே||

எந்த அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்குமோ, அந்தவிஷ்ணு பத்னியை முக்கரணங்களாலும் சேவிக்கிறேன்.

15. ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்யசோபே|
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||

தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே!மிக வெண்மையான துகில், சந்தனம் மாலை இவற்றால் அழகியவளே!இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே!மூவலகிற்கும் ஐச்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!

16. திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்|
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்||

திக்கஜங்கள், தங்கக்குடங்களின் வழியே பெருகச்செய்த ஆகாசகங்கை நீரால் நனைந்த உடலையுடையவளும், உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், உலக நாயகரான விஷ்ணு ப்ரியையானவளும், பாற்கடல் பெண்ணுமாகிய லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்.

17. கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூரதரங்கிதை ரபாங்கை:|
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:||

மஹாலக்ஷ்மி!மஹாவிஷ்ணுவின் பிரியே!நீ கருணை ததும்பும் கடாக்ஷங்களால், மிக ஏழையானவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டிய முதல் நபரான என் மேல் பார்த்தருள்வாயாக !

18. ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்!
குணாதிகா குருதர பாக்ய பாஜினோ (பாஜனா:)
பவந்தி தே புவி புதபாவிதாசாய:||

மூன்று வேதங்களே உருவான த்ரிலோகமாதாவும் லக்ஷ்மிதேவியை இந்தஸ் ஸ்தோரங்களால் தினந்தோறும் ஸ்தோத்ரம் செய்பவர் குணம் மிக்கவராயும், மிகப்பெரிய பேறு பெற்றவராயும், அறிஞர் போற்றும் கருத்து கொண்டவராயும் ஆவர்.



Kanakadhara Stotram MP3

Kanakadhara Stotram Video with meaning.
 

Thanks to



KANAKADHARA STOTRAM Meaning in English:-

अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती
भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिलविभूतिरपाङ्गलीला
माङ्गल्यदाऽस्तु मम मङ्गलदेवतायाः ॥ १॥

The dark Tamala tree in full bloom attracts the femalebeetle and even so Mahalakshmi is attracted and finds happiness in the fragrant and dark-complexioned body of Hari and makes it tingle with joy. May she bestow on me prosperity by her auspicious glance. Note: The poet in Shankara compares the dark Tamala tree to the dark beautiful form of Vishnu, the dark beetle to the black lustrous eyes of Mahalakshmi. The glance of Lakshmi’s eyes on Vishnu gives him great happiness. A mere momentary flash of her eyes on anybody will bless him with prosperity || 1 ||

मुग्धा मुहुर्विदधती वदने मुरारेः
प्रेमत्रपाप्रणिहितानि गतागतानि ।
माला दृशोर्मधुकरीव महोत्पले या
सा मे श्रियं दिशतु सागरसंभवायाः ॥ २॥

The shy love-laden sidelong glance of the beauteous dark eyes of the daughter oof the Milky Ocean, returns again and again to the beauteous lotus face of Murari,
just like the black bee constantly returning and flitting about the beautiful blue lotus flower. I pray that these glances be bestowed upon me to bless me with prosperity.
Note: The dark beauteous face of the Lord is likened to the blue lotus. The dark glance rests upon the handsome face of the Lord and out of shyness the eyes are turned away but love again makes the glance rest upon the Lord. This series of sidelong glances are likened here to a string or Mala and they further look like the series of trips which the honey seeking black bee makes to the blue lotus. The devotee hopes that he will be prosperous if a sidelong glance of the Goddess
of Wealth falls at least momentarily on him || 2 ||

आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दं
आनन्दकन्दमनिमेषमनङ्गतन्त्रम् ।
आकेकरस्थितकनीनिकपक्ष्मनेत्रं
भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनायाः ॥ ३॥

The eyes of Mukunda remain closed in ecstasy. The beauteous dark eyes of Lakshmi remain fixed on Mukunda in love and wonder and remain open without blinking| May these eyes of Mahalakshmi fall on me and bless me with prosperity and happiness || 3 ||

बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या
हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला
कल्याणमावहतु मे कमलालयायाः ॥ ४॥

Lord Vishnu whose chest is adorned by the Kaustubha Mala is also adorned by the series of the beauteous glances of Goddess Mahalakshmi. This string of glances
resembles a necklace of precious blue stones of Indraneela and they are capable of fulfilling all the wishes of Hari Himself. May this string of glances be directed
towards me so that it will bring me auspiciousness.|| 4 ||

कालाम्बुदालिललितोरसि कैटभारेः
धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
मातुस्समस्तजगतां महनीयमूर्तिः
भद्राणि मे दिशतु भार्गवनन्दनायाः ॥ ५॥

Mahalakshmi shining on the dark broad chest of Mahavishnu is like the streak of lightning illuminating the dark rain clouds. May she, the daughter of the Sage Bhargava worshipped as Mother by the entire universe, bring me auspiciousness|| 5 ||

प्राप्तं पदं प्रथमतः खलु यत्प्रभावात्
माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन ।
मय्यापतेत्तदिह मन्थरमीक्षणार्धं
मन्दालसं च मकरालयकन्यकायाः ॥ ६॥

The God of Love, Manmatha, could gain access to Madhusudana (the destroyer of the demon Madhu, i.e. Vishnu) only because he was favored with the blessing
glance from Mahalakshmi. May her auspicious indolent sideglance fall on me (May she bless me with prosperity by looking at me in passing at least for a moment || 6 ||

विश्वामरेन्द्रपदविभ्रमदानदक्षं
आनन्दहेतुरधिकं मुरविद्विषोऽपि ।
ईषन्निषीदतु मयि क्षणमीक्षणार्धम्
इन्दीवरोदरसहोदरमिन्दिरायाः ॥ ७॥

The status of the king of kings or the exal;ted position of an Indra are given effortlessly by Mahalakshmi by a mere momentary glance. Murari (Vishnu) who is supreme bliss itself is made happy by it. May this glance from the blue-lotus eyes of Lakshmi fall on me for a moment at least. Note: The beautepus lotus eyes flashing momentarily on someone is capable of making him a king of kings ir even an Indra. Murari the seat of all bliss is thrown into ecstasy by it. Will she not glance at me , even for a second? || 7||

इष्टाविशिष्टमतयोऽपि यया दयार्द्र-
दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते ।
दृष्टिः प्रहृष्टकमलोदरदीप्तिरिष्टां
पुष्टिं कृषीष्ट मम पुष्करविष्टरायाः ॥ ८॥

The higher worlds like Swarga which are difficult of attainment and for which great sacrifices like Ashwamedha are performed become easily attainable by the compassion filled look of the lotus eyes of Mahalakshmi. May she look at me so that I may attain my heart’s desires. || 8 ||

दद्याद्दयानुपवनो द्रविणाम्बुधारां
अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे ।
दुष्कर्मधर्ममपनीय चिराय दूरं
नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥ ९॥

The dark rain clouds driven by the monsoon winds releases rain on the parched earth and quench the thirst of the Chataka bird and brings prosperity on the earth. In like manner may the dark eyes of Mahalakshmi resembling the rain cloud wafted by the breeze of compassion relese the rain of prosperity on this devotee of a Chataka
bird stricken with the load of accumulated sins so that the sins are washed away and prosperity bestowed upon him. || 9 ||

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति
शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।
सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै
तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥ १०॥

We offer obeisance to the Goddess Mahalakshmi, the consort of Narayana, the preceptor of all the three worlds. She is variously known as Saraswati the Goddess
of Learning, as Goddess Lakshmi, the Divine consort of Mahavishnu, as Shakambhari or as Parvati the consort of Lord Maheshwara. Verily it is she who is playfully engaged in creation, protaction and final destruction of the Universe || 10 ||

श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै
रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै
पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै ॥ ११॥

O Goddess as the very manifestation of the Vedas, you grant the fruits of godd action. Beautiful in form like Rati Devi you are the very ocean of superlatively beautiful qualities. Having your abode in the beautiful lotus of a hundred petals, you are Shakti personified. O consort of Purushottama, You are the Goddess of plenty. Please accept my obeisance || 11 ||

नमोऽस्तु नालीकनिभाननायै
नमोऽस्तु दुग्धोदधिजन्मभूम्यै ।
नमोऽस्तु सोमामृतसोदरायै
नमोऽस्तु नारायणवल्लभायै ॥ १२॥

O Consort of Narayana! Whose face is as beautiful as the lotus in bloom, I bow down to thee. Born out of the milky ocean, along with the moon and the Divine nectar, O Goddess! accept my pranams|| 12 ||

नमोऽस्तु हेमाम्बुजपीठिकायै
नमोऽस्तु भूमण्डलनायिकायै ।
नमोऽस्तु देवादिदयापरायै
नमोऽस्तु शार्ङ्गायुधवल्लभायै ॥ १३॥

I prostrate before you, O Goddess, who are seated on the Golden Lotus, who is Goddess of the earth, the consort of Narayana, compassionate to the Devas|| 13 ||

नमोऽस्तु देव्यै भृगुनन्दनायै
नमोऽस्तु विष्णोरुरसि स्थितायै ।
नमोऽस्तु लक्ष्म्यै कमलालयायै
नमोऽस्तु दामोदरवल्लभायै ॥ १४॥

My obeisance to you, O daughter of Bhrigu, consort of Damadara| O Lakshmi, seated on Lotus and adorning the broad chest of Mahavishnu, my salutations to Thee|| 14 ||

नमोऽस्तु कान्त्यै कमलेक्षणायै
नमोऽस्तु भूत्यै भुवनप्रसूत्यै ।
नमोऽस्तु देवादिभिरर्चितायै
नमोऽस्तु नन्दात्मजवल्लभायै ॥ १५॥

O Consort of Gopala, the son of Nanda, you are worshipped by the Devas. You are Jyoti incarnate, I prostrate before Thee. Your eyes are like lotus petals. You have created the world and you bestow prosperity. Please accept my salutations || 15 ||

सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि
साम्राज्यदानविभवानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरितोद्धरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥ १६॥

May I always have the desire to prostrate before you because a pranam to you is capable of bestowing all prosperity and will bring happiness to all the senses. Worshipping O Lotus-eyed Goddess not only removes all miseries but it confers happiness and plenty || 16 ||

यत्कटाक्षसमुपासनाविधिः
सेवकस्य सकलार्थसंपदः ।
संतनोति वचनाङ्गमानसैः
त्वां मुरारिहृदयेश्वरीं भजे ॥ १७॥

The devotee who worships your Kataksha (sidelong glance) is blessed with wealth and prosperity. To you, the queen who dominates the heart of Vishnu, my pranamas, through word, thought, and deed|| 17 ||

सरसिजनिलये सरोजहस्ते
धवलतमांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥ १८॥

Seated on the lotus with the lotus flower in your hand, dresed in dazzling white and adorned with garlands andsandalwood paste, you gladden our hearts. O Goddess,
the consort of Vishnu you who confer prosperity on all the three worlds, please show compassion towards me|| 18 ||

दिग् हस्तिभिः कनककुंभमुखावसृष्ट-
स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशेष-
लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्रीम् ॥ १९॥

O mother of all the worlds, consort of Vishnu the lord of the Universe, the Dig-gajas (the celestial elephants guarding various directions) bathe you everyday with waters of the Deva Ganga poured ouitfrom golden vessels. O daughter of the milky ocean, I prostrate before Thee || 19 ||

कमले कमलाक्षवल्लभे त्वं
करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां
प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥ २०॥

O Goddess Lakshmi, consort of the Lotus-eyed Mahavishnu, direct your gaze filled with compassion at me, your devotee who am the poorest of the poor, so that I may become the true recipient of the benefits of your compassion|| 20 ||

देवि प्रसीद जगदीश्वरि लोकमातः
कल्याणगात्रि कमलेक्षणजीवनाथे ।
दारिद्र्यभीतिहृदयं शरणागतं माम्
आलोकय प्रतिदिनं सदयैरपाङ्गैः ॥ २१॥

O Goddess, controller of the Universe and protector of the people, blessing with your limbs, and gazing with your lotus-like eyes, forgive me. With my heart filled with fear of poverty, I surrender myself wholly to you, that you may watch over me every day with unbroken compassion || 21 ||

स्तुवन्ति ये स्तुतिभिरमीभिरन्वहं
त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनो
भवन्ति ते भुवि बुधभाविताशयाः ॥ २२॥

Those who sing the praise of Mahalakshmi who is the vedas personified, by these stotras everyday will be blessed with all good qualities, unsurpassed good fortune and powers of the intellect which will earn praise from even the learned. || 22 ||